Malavika Mohanan Round Up: பெரிய ஹீரோக்களை கையில் வைத்துள்ள மாளவிகா மோகனன்.. பிறந்த நாள் ரவுண்டப்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என அனைத்திலும் கலக்கி வருகின்ற நடிகையாக உள்ளார். இன்று அதாவது ஆகஸ்ட் 4ஆம் தேதி அவர் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நாளில் அவர் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகை மாளவிகா மோகனன் சினிமா பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். அவரது தந்தை கே.யு. மோகனன் ஒளிப்பதிவாளர். இவரும் தந்தை போல ஒளிப்பதிவாளராக மாற வேண்டும் அல்லது இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தார். ஆனால் கல்லூரி காலத்தில் கிடைத்த அறிவுரைகள் மற்றும் அப்போது அவருக்குள் ஏற்பட்ட மனமாற்றம் அவரை நடிகையாக மாற்றியுள்ளது. ஆனாலும் அவருக்குள் இப்போதும் இயக்குநர் என்ற ஆசை இருந்து கொண்டே உள்ளது.

தமிழில் பேட்ட படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்திருந்தாலும், இவரது முதல் படம் மலையாளத்தில் தான். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான பட்டம் போலே படத்தில் அறிமுகமான இவர், இதுவரை மொத்தமாக வெகு சில படங்களில் தான் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் இவரது படங்கள் நேரடியாக வெளியாகியுள்ளன. தெலுங்கில் பிரபாஸின் ராஜா சாப் படத்தில் நடித்துள்ளார். தமிழில் சர்தார் 2 படத்தில் நடித்து முடித்துவிட்டார். மலையாளத்தில் ஹிருதய பூர்வம் படத்தில் தன்னை விட 33 வயது குறைவான மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பிரமிப்பு: மாளவிகாவிற்குள் இருக்கும் இயக்குநர், அவருக்கு கதையையும் கதாபாத்திரத்தையும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான தங்கலான் படத்தில் இவரது நடிப்பு, அதற்கு தன்னை அவர் அர்ப்பணித்துக் கொண்டது என அனைத்துமே பலருக்கும் பிரமிப்பு தான். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வெளியானால் மோஸ்ட் வான்டட் நடிகைகளில் ஒருவராக இவர் இந்திய அளவில் மாறிவிடுவார் என கூறப்படுகிறது.

உடல்நலன்: மாளவிகா மோகனனுக்கு 32 ஆண்டுகள் ஆனாலும் தனது உடல் நிலையை சீராக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் காலையில் எழுந்ததும், அவர் தவறாமல் உடற்பயிற்சிகளை செய்துவிடுவாராம். அதுவும் Planks எனப்படும் கை, கால்களை மட்டும் தரையில் உந்தி உடலை மேலேழுப்பும் உடற்பயிற்சியை நடிகை தவறாமல் செய்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது. அதுதான் அவரை மிகவும் கிளாமராக வைத்திருக்க உதவுவதாகவும் அவர் நம்புகிறாராம்.
சொத்து மதிப்பு: மாளவிகா மோகனனுக்கு தனிப்பட்ட முறையில் சொத்து என்று வைத்துக் கொண்டால் ரூயாப் 16 முதல் 20 கோடிகள் வரை சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இவரிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பி.எம். டபள்யூ என மொத்தம் மூன்று சொகுசுக் கார்கள் உள்ளது எனவும் கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு சுமார் 4 கோடிகள் முதல் 10 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் மாளவிகா மோகனுக்கு அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் படக்குழுவினர், ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











