தலை நிறைய மல்லிகை பூ… கேரளா சேலை.. மாஸாக பொங்கல் கொண்டாடிய மாஸ்டர் நாயகி!
சென்னை : மாஸ்டர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை கோலாகலமாக பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து சந்தோஷமாக கொண்டாடி வருகிறார் மாளவிகா மோகனன்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி வரும் சூப்பர் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன். ஹிந்தி திரைப் படங்களிலும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.
பொங்கல் ஸ்பெஷலாக தலை நிறைய மல்லிகை பூவுடன் கேரளா சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

ரொமான்ஸ் செய்த
மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளும் நடிகையுமான மாளவிகா மோகனன் இப்பொழுது இந்திய அளவில் பிரபலமாகி வரும் இளம் நடிகையாக இருந்து வருகிறார். மலையாளத்தில் பட்டம் போலே திரைப் படத்தில் துல்கர் சல்மானுடன் முதல் திரைப்படத்திலேயே ரொமான்ஸ் செய்த மாளவிகா மோகனன் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக
பேட்ட திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மிகச் சிறியது என்றாலும் வரும் காட்சிகளில் எல்லாம் அனைவரையும் அசரவைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களால் அந்த அளவுக்கு கவனிக்கப்படவில்லை. இரண்டாவது திரைப்படத்திலேயே விஜய்யுடன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் இவரைப்பற்றி தேடாத ஆட்களே கிடையாது. இந்த நிலையில் இப்பொழுது தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக நடித்த இரண்டே திரைப்படங்களில் மாறியுள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கும்
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பல்வேறு சாதனைகளை செய்து வரும் நிலையில் அதில் விஜயுடன் பல காட்சிகளில் ரொமான்ஸில் கலக்கி இருக்கும் மாளவிகா மோகனுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வர கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது.

மயக்க வைக்கும் புன்னகையால்
திரைப்படங்களானாலும் சரி சமூகவலைத்தளங்கள் ஆனாலும் சரி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மாளவிகா மோகனன் தவறியதே இல்லை அந்த வகையில் பொங்கலுக்கு கேரளா சேலையில் தலை நிறைய மல்லிகை பூவுடன் சிறுத்த இடுப்பை காட்டிக்கொண்டு மயக்க வைக்கும் புன்னகையால் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் இந்த பொங்கல் ஸ்பெஷல் போட்டோஸ் இப்பொழுது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











