என்ன ஒரு என்ன ஒரு அழகியடா... மாஸ்டர் நாயகியைப் பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள்!
சென்னை : மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
Recommended Video
சமீபத்தில் தமிழில் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதோடு வசூல் சாதனை புரிந்துள்ளது.
நடிகர் தனுஷுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இப்பொழுது சிவப்பு நிற ட்ரஸில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

மிகக்குறுகிய காலத்திலேயே
சமீபத்திய மலையாள வரவாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனனுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் மிகக்குறுகிய காலத்திலேயே கிடைத்துவிட இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாகி ரசிகர்களின் ஆரவாரத்தில் நனைந்த தோடு பல வசூல் சாதனைகளையும் புரிந்துள்ளது.

பல மடங்கு
இந்த திரைப்படத்திற்கு பிறகு மாளவிகா மோகனனின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து போக இந்தியிலும் படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இப்போது விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் மெகா பட்ஜெட் வெப்சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் மாளவிகா மோகனன் இதற்கு முன்பாகவே பியான்ட் த கிளவுட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து ஹிந்தியில் அறிமுகம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட படப்பிடிப்பு
இப்போது இயக்குனர் கார்த்திக் நரேன்,தனுஷ் முதன்முறையாக இணைந்திருக்கும் டி 43 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றிருக்கும் நிலையில் தனுஷுடன் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வைரலானது. இன்னும் தலைப்பிடப்படாத இந்த படம் 2021 இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன ஒரு அழகியடா
அசர வைக்கும் அழகால் பல கம்பீரமான இளைஞர்களை கொக்கி போட்டு இழுத்து தன் பக்கம் வைத்திருக்கும் மாளவிகா மோகனன் இப்பொழுது சிகப்பு நிற சேலையில் செம ஹாட்டாக இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நிற்பதோடு தலையில் பத்து ரூபாய் காயின் சைசுக்கு பெரிய நெத்திச்சுட்டி ஒன்றையும் வைத்துக்கொண்டு சொக்கவைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகாவைப் பார்த்து ரசிகர்கள் என்ன ஒரு என்ன ஒரு அழகியடா என வர்ணித்து வர இப்பொழுது இந்த ஹாட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











