ப்ரீ-ரிலீஸ் விழாவையே ஹாட் ஆக்கிய மாளவிகா மோகனன்.. இணையத்தில் டிரெண்டாகும் போட்டோஸ்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கிளாமர் லுக்கால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கருப்பு நிற உடையில் ஸ்டைலிஷ் மற்றும் எலிகண்ட் தோற்றத்தில் அவர் நிகழ்ச்சிக்கு வந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்திய அளவில் பிரபலமான முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் மாளவிகா மோகனன், தனது நடிப்பு திறமைக்கும், மாடர்ன் ஸ்டைலுக்கும் பெயர் பெற்றவர். தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகா, முதல் படத்திலேயே கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, தனுஷூடன் மாறா, விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன், தமிழ் ரசிகர்களிடையே தனி அடையாளத்தை உருவாக்கினார். இப்படம் அவருக்கு சினிமாவில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. நடிப்பு, அழகு, ஸ்கிரீன் பிரசன்ஸ் என அனைத்திலும் அவர் பாராட்டப்பட்டார்.

நடிகை மாளவிகா மோகன்: கடந்த ஆண்டு தமிழில் வெளியான 'தங்கலான்' திரைப்படத்தில் மிரட்டலான மற்றும் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா, தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். கிளாமர் ரோல்களில் மட்டுமல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களிலும் தன்னை நிரூபிக்க முடியும் என்பதை அவர் அந்த படத்தின் மூலம் உறுதிப்படுத்தினார். தற்போது, மாளவிகா மோகனன் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' மற்றும் 'சர்தார் 2' உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
கிளாமர் லுக்: பிரபாஸுடன் அவர் நடித்துள்ள 'தி ராஜா சாப்' திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், கருப்பு நிற கிளாமர் உடையில் ரசிகர்களை கவர்ந்தார். அவரது தோற்றம், நடை, ஸ்டைல் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, மாளவிகா மோகனனின் ஸ்டார் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











