திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா? கவர்ச்சி உடையில் பக்காவாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்!

சென்னை: அழகான க்யூட் நடிகையான மாளவிகா மோகன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வருகிறார். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான தங்கலான் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. படங்களில் பிசியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானார். அந்த படத்தை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி காட்சி எதுவும் இல்லை. படத்திற்கு ஹீரோயின் தேவை என்பதற்காக ஏதோ ஒன்று இரண்டு காட்சிகளிலும் ஒரு பாட்டிலும் மட்டுமே வந்து போனார். இதைத்தொடர்ந்து, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மலையாளம், கன்னட மொழிப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

malavika mohanan glamour photo

தங்கலான்: பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. சில சரித்திர உண்மைகளையும், வரலாறுகளையும் அடிப்படியாக கொண்டு, கற்பனை கதையோடு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், மாளவிகா கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பேசப்பட்டது.

malavika mohanan glamour photo

பாலிவுட்டில் கவர்ச்சி: இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமான மாளவிகா மோகன், யுத்ரா என்ற படத்தில் சித்தாந்த் சதுர்வேதிக்கு ஜோடியாக நடித்தார். ஸ்ரீ தேவியின் கடைசி படமான மாம் படத்தை இயக்கிய ரவி உத்யவார் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். யுத்ரா படத்தில் சித்தாந்த் சதுர்வேதியுடன், பிகினி உடையில் கடற்கரையில் படு நெருக்கமான முத்தக் காட்சிகளிலும் பல கசமுசா காட்சிகளிலும் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இதைப்பார்த்த இணையவாசிகள் தமிழில் மட்டும் இழுத்துப்போர்த்தி நடித்துவிட்டு, இந்தியில் இப்படியா என கேள்வி கேட்டனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்போது மாளவிகா தி ராஜா சாப் என்ற தெலுங்கு திரைப்படத்திலும், சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

malavika mohanan glamour photo

பக்காவான போஸ்: தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்தாலும், இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து, மாளவிகா மோகனனின் அழகை வர்ணித்த கவிதைபாடி வருகின்றனர். மாளவிகா மோகனனை இன்ஸ்டாகிராம் மட்டும் நான்கு புள்ளி மூன்று மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்காகவே எப்போதும் விதவிதவிமான போட்டோக்களை போடுவதை இவர் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

malavika mohanan glamour photo

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X