Malavika: தங்கலான்தான் என்னோட ஆக்ஷன் பார்ட்னர்.. மீண்டும் விக்ரமுடன் மோத தயாரான மாளவிகா மோகனன்!

சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்களின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் பத்து தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வெளியீடாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் மிகச் சிறப்பாக நடந்துள்ளது.

ஆடியே ரிலீஸ் நிகழ்ச்சியில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, ஜிவி பிரகாஷ், பா ரஞ்சித், ஞானவேல் ராஜா, பசுபதி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை களைகட்ட வைத்தனர். நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் படத்தின் நாயகிகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி இருவரும் இணைந்து தோன்றியது ரசிகர்களை கொண்டாட செய்தது. இருவருமே சிகப்பு கலரில் புடவை அணிந்து வந்திருந்தனர்.

Vikram Malavika mohanan

தங்கலான் படம்: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்களின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் சில தினங்களில் அதாவது வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளது. இந்தப்படம் முன்னதாக ஏப்ரல் மாதத்திலிருந்து ரிலீஸுக்கு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சுதந்திர போராட்ட காலகட்டத்தை ஒட்டிய கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போதே ரிலீசாகவுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க அதிகமான விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இசை வெளியீட்டு நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சியில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, இயக்குனர் பா ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் நடிகர்கள் மட்டுமில்லாமல் படம் சிறப்பாக அமைய காரணமாக இருந்த தொழில்நுட்ப கலைஞர்களும் ஒவ்வொருவராக மேடையேற்றப்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் நாயகிகள். பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் இருவரையும் அடுத்தடுத்து மேடைக்கு அழைத்து அவர்களிடம் படம் குறித்த எக்ஸ்பீரியன்ஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆங்கர் கேள்வி எழுப்புவதற்கு முன்னதாகவே மேடையில் சரசரவென அனைத்து நபர்களின் பெயர்களையும் அடுக்கினார் மாளவிகா மேகனன்.

பா ரஞ்சித்தின் ஆர்மி: ஜிவி பிரகாஷ், விக்ரம், பார்வதி, பசுபதி என அவரது லிஸ்ட் நீண்டது. தொடர்ந்து பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவித்தார். பா ரஞ்சித் மிகப்பெரிய ஆர்மியை தன்னுடைய பின்னால் வைத்துள்ளதாக மாளவிகா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் படத்தில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளை மேற்கொண்ட நிலையில் இந்த மேடையில் அவர் மீண்டும் சண்டையிட வேண்டும் என்றால் யாரிடம் சண்டையிடுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், தன்னுடைய ஆக்ஷன் பார்ட்னர் என்றால் அது தங்கலான்தான் என்று கூறினார்.

விக்ரமுடன் சண்டையிட விருப்பம்: அதனால் நடிகர் விக்ரமுடன் தான் மீண்டும் சண்டையிட விரும்புவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து அவர் மேடையில் நடிகை பார்வதிக்கு சிலம்பம் சுற்ற கற்றுக் கொடுத்ததுடன் இருவரும் அடுத்தடுத்து மேடையிலேயே சிலம்பம் சுற்றியதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் தெரிவித்தனர். இவ்வாறாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. முன்னதாக தங்கலான் படத்தை போல தான் மிக அதிகமாக இதுவரை எந்தப் படத்திற்காகவும் கஷ்டப்படவில்லை என்றும் மாளவிகா மோகனன் எமோஷனலாக குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X