பிரபல பத்திரிக்கைக்காக நச்சுனு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்..பார்த்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஷாக் அடிக்குதே!

சென்னை : நடிகை மாளவிகா மோகனன் பிரபல பத்திரிக்கைக்கு நச்சுனு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.

பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், தனுஷிற்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

அதோடு யுத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், மலையாளத்தில் பல புதிய படங்களில் நடிக்கவும் மாளவிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன்

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் இளைஞர்களின் கனவுகன்னியான மாளவிகா மோகனன் இருக்கிறார்.கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை மாளவிகா மோகனன் 1992 ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவரது தந்தை மோகனன்பல பாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

மாடல் அழகி

மாடல் அழகி

தனது தந்தையால் மாளவிகாவிக்கும் சினிமா மீதும் நடிப்பு மீது விருப்பம் இருந்ததால், மாடலிங் துறையில் நுழைந்து சர்வதேச அளவிலான பல ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்றார். அதில் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் 2013 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மலையாளத் திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் கால்பதித்தார்.

வசீகரமான தோற்றம்

வசீகரமான தோற்றம்

இதையடுத்து பகத் பாசிலுக்கு ஜோடியாக நலே படத்தில் பழங்குடியினப் பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக சில மலையாளத் திரைப்படங்களில் நடித்த மாளவிகா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றம் மக்களுக்குப்பிடித்துப்போனது.

நச்சுனு போஸ்

நச்சுனு போஸ்

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா பட வாய்ப்பு குறைந்ததால், விதவிதமான போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். இவரின் அதீத கவர்ச்சி காட்டும் பிகினி போட்டோ, வீடியோக்களை பார்த்து விட்டு ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். தற்போது இவர் பிரபல அட்டைப்படத்திற்காக நச்சுனு போஸ் கொடுத்துள்ளார். இவரின் அழகையும் பார்த்து பார்த்து புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X