தனித்தீவில் குட்டி உடையில் குதூகலமாய் மாலு... ஒன்ஸ்மோர் கேட்கும் ஃபேன்ஸ்!

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்

இப்பொழுது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

தமிழைத் தொடர்ந்து இந்தியிலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் மாளவிகா மோகனன் தனித்தீவில் குட்டி உடையில் குதூகலமாக சிரித்தபடி உள்ள கிளுகிளுப்பான புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

நேர்த்தியான நடிப்பை

நேர்த்தியான நடிப்பை

மாநகரம்,கைதி என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதைத் தொடர்ந்து இயக்கிய திரைப்படம் மாஸ்டர் விஜய்யின் நடிப்பில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது. இதுவரை விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமான படமாக மாஸ்டர் வெளியானது. இதில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாளவிகா இப்பொழுது உள்ளார்.

ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில்

ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில்

மாஸ்டர் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தமிழ் , ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மாளவிகா மோகனன் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகிவரும் மாறன் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் மாளவிகா மற்றும் தனுஷ் இருவரும் பத்திரிக்கையாளர்களாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

கனவுக்கன்னியாக

கனவுக்கன்னியாக

தமிழில் நடித்த இரண்டே படங்களில் இப்பொழுது உச்ச நடிகையாக உயர்ந்துள்ள மாளவிகா மோகனன் கவர்ச்சி காட்டுவதிலும் டாப்பில் உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். எனவே படங்களிலும் மாளவிகா மோகனன் கவர்ச்சியாக நடிப்பார் என ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்

தனித்தீவில் குட்டி உடையில்

தனித்தீவில் குட்டி உடையில்

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது தனித்தீவில் குட்டி உடையில் குதூகலமாக சிரித்தபடி உள்ள கிளுகிளுப்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X