ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலுதான்... ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் கவர்ச்சி காட்டம்!
சென்னை: விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகையாக மாறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்
க்யூட்டான நடிப்புக்கு இணையாக அதீத கவர்ச்சியையும் காட்டி வரும் இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது
இந்த வகையில் இப்பொழுது ஸ்டைலிஷான லுக்கில் படுகவர்ச்சியான பச்சை நிற உடையில் வெளிநாட்டு வீதிகளில் சுற்றித் திரியும் மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

சசிகுமாருக்கு ஜோடியாக
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட வெளியாகி பட்டையை கிளப்பியது. பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் மிகவும் புதுமையான கதை களத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் முக்கியமான கதாபாத்திரத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். மாளவிகா மோகனன் கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் மிக முக்கியமானது என சொல்லப்பட்டாலும் ரசிகர்களால் அந்த அளவுக்கு கவனிக்கப்படவில்லை

விஜய்யுடன் முதல்முறையாக
இந்த நிலையில் மாநகரம்,கைதி ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் முதல்முறையாக இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இப்போது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகையாக மாறியுள்ளார். மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் பிரபலமடைந்த மாளவிகா மோகனன் தமிழ்,மலையாளம், இந்தி படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது
துருவங்கள் 16 படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் திரைப்படம் மாறன். இந்தியாவிலும் மற்றும் வெளிநாட்டில் சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ஒன்றாக உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது
Recommended Video

படுகவர்ச்சியான உடையில் ஸ்டைலிஷ் வாக்
ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் மாளவிகா மோகனன் தற்போது நடித்து வருகிறார். நடிகர் சித்தான்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கப்பட்டது அதில் கலந்து கொண்ட பொழுது படப்பிடிப்புத் தளத்தில் தனக்கு கையில் ஏற்பட்ட காயத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட ரசிகர்கள் பதறிப்போய் என்னாச்சு என அன்போடு கேட்டு வருகின்றனர். மிகச் சிறந்த நடிப்புக்கு இணையாக அதீத கவர்ச்சியையும் அள்ளித் தெளித்து வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது பச்சை நிற படுகவர்ச்சியான உடையில் ஸ்டைலிஷான கூலிங்கிளாஸ் உடன் வெளிநாட்டு வீதிகளில் சுற்றிவரும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











