‘மாறன்‘ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இணைந்த மாளவிகா மோகனன் !
சென்னை : தனுஷின் மாறன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாளவிகா மோகனன் சென்னை வந்துள்ளார்.
இந்த படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா இருவரும் பத்திரிகையாளர்களாக நடிக்கிறார்கள்

மாறன்
தனுஷ், தனது 43வது படமான மாறன் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதை அமைத்துள்ளார்.

இறுதி கட்டபடப்பிடிப்பு
இப்படத்தின் இறுதி கட்டபடப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்கியது. இப்படம் ஒரு புலன்விசாரணை த்ரில்லர் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.

முக்கிய நடிகர்கள்
மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் இப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் மற்றும் கார்த்திக் நரேன் பாடல்களை எழுதியுள்ளனர்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாளவிகா மோகனன் சென்னை வந்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா இருவரும் பத்திரிகையாளர்களாக நடிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது, இது ஒரு உணர்ச்சிமிக்க அதிரடி த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது.

நானே வருவேன்
தனுஷின் திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிந்தது. மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள நானே வருவேன் படப்பிடிப்பை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தெலுங்கு படத்தில்
இந்தப் படங்களை எல்லாம் முடித்துவிட்டு, சேகர் கம்முலா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதனைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்றொரு தெலுங்குத் திரையுலகின் இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையும் தெலுங்குத் திரையுலகின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











