இந்த காலத்து சிலுக்கு மாளவிகா மோகன் தான் போல.. என்னமா போஸ் கொடுத்திருக்காங்க நீங்களே பாருங்க!
சென்னை : மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை மாளவிகா மோகனன்
இப்பொழுது கார்த்திக் நரேன் இயக்கத்தில் திரில்லர் கதை களத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
தமிழில் மிக விரைவிலேயே முன்னணி நடிகையாக மாற உள்ள மாளவிகா மோகனன் இந்த காலத்து சிலுக்கு போல படுகவர்ச்சியாக சேலையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன

சசிகுமாருக்கு ஜோடியாக முக்கியமான வேடத்தில்
மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாக்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக முக்கியமான வேடத்தில் நடித்து இருந்தார்

பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது
பேட்ட எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தித் தரவில்லை இருப்பினும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவை கலக்கினார். விஜய்,விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு என நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்க மாளவிகா மோகனன் முதல் முறையாக முழு கதாநாயகியாக நடித்த மாஸ்டர் திரைப்படம் இவருக்கு எக்கச்சக்க பெயரையும் புகழையும் பெற்றுத் தந்ததோடு தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது

ரிப்போர்ட்டராக நடித்து வருவதாக
மாஸ்டர் கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து இப்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் தனுஷ் இருவரும் ரிப்போர்ட்டராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த படம் இப்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என கூறப்படுகிறது

இந்த காலத்து சிலுக்கு போல
ஒரே ஒரு வெற்றிப்படத்தை கொடுத்திருந்தாலும் அடுத்ததாக மீண்டும் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட வஞ்சனை இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இப்போது இந்த காலத்து சிலுக்கு போல பளபளக்கும் சேலையில் அதீத கவர்ச்சியில் வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வைரலாகின்றன.


Click it and Unblock the Notifications