இந்த வயதில்தானே கவர்ச்சிப் போட்டோ போட முடியும்... மாளவிகா மோகன் அதிரடி

சென்னை : நடிகை மாளவிகா மோகனன், ரஜினி, விஜய் மற்றும் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தனுஷுடன் இவர் நடித்துள்ள மாறன் படம் வரும் 11ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தான் ரஜினியுடன் மீண்டும் நடிக்க விரும்புவதாக மாளவிகா தெரிவித்துள்ளார்.

 நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன், ரஜினியுடன் பேட்ட படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார். சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. தொடர்ந்து அடுத்த படத்திலேயே விஜய்க்கு ஜோடியானார். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் நடக்கும் அவலங்களை தீர்ப்பதற்கு இவர் காரணமாக இருப்பார்.

மாறன் படம்

மாறன் படம்

தொடர்ந்து தற்போது அடுத்ததாக தனுஷுடன் மாறன் படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 11ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வீடியோ ஜர்னலிஸ்டாக நடித்துள்ளார் மாளவிகா. தனுஷுடன் நடிக்க ஆசை என்று ஒரு பேட்டியில் இவர் கூற, குறைந்த காலகட்டத்திலேயே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ரஜினியுடன் மீண்டும் நடிக்க விருப்பம்

ரஜினியுடன் மீண்டும் நடிக்க விருப்பம்

இந்த விஷயங்களை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். மேலும் ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் நடித்துள்ள இவர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

 மாளவிகா ஏக்கம்

மாளவிகா ஏக்கம்

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் பயோ பிக் எடுக்கப்பட்டால் அதில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் என மூன்று படங்களில் நடித்திருந்தாலும் நல்ல பாடல் காட்சிகள் இதுவரை அமையவில்லை என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

போட்டோகிராபியில் ஆர்வம்

போட்டோகிராபியில் ஆர்வம்

சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார் மாளவிகா. சமூக வலைதளப் பக்கங்களில் ஒருவரின் முகம், முடி உள்ளிட்டவை குறித்து செய்யப்படும் விமர்சனம் குறித்தும் இவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு போட்டோகிராபியில் மிகுந்த ஆர்வம் என்றும் கூறியுள்ளார்.

 கவர்ச்சிப் புகைப்படங்கள்

கவர்ச்சிப் புகைப்படங்கள்

வைல்ட் லைப் போட்டோகிராபியில் அதிகமான ஆர்வம் உள்ளதாகவும் அடிக்கடி மசனக்குடி சென்று புகைப்படங்கள் எடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் மாலத்தீவு சென்று கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த வயதில்தானே கவர்ச்சிப் புகைப்படங்களை எடுக்க முடியும் என்றும் மக்கள் ரசிக்கட்டுமே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X