தங்கலானில் ஜாக்கெட்டுத்தான் இல்ல.. இந்தியில் மாளவிகா எப்படி நடித்து இருக்காருனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் படத்தில் நடித்து வரும் மாளவிகா இந்தி படத்தில் வரம்பு மீறி கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். அதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேட்ட படத்தைத் தொடர்ந்து தனுஷூக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி காட்சி எதுவும் இல்லை. இருந்தாலும் படத்திற்கு ஹீரோயின் தேவை என்பதற்காக ஏதோ ஒன்று இரண்டு காட்சி வைத்தது போல இருந்தது. இதைத்தொடர்ந்து, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மலையாளம், கன்னட மொழிப்படத்திலும் நடித்து வருகிறார்.

malavika mohanan siddhant chaturvedi yudhra

தங்கலான்: அண்மையில் இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

நெகிழவைத்த காட்சி: சில சரித்திர உண்மைகளையும், வரலாறுகளையும் அடிப்படியாக கொண்டு, கற்பனை கதையோடு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், பழங்குடி மக்கள் முதன் முறையாக ஜாக்கெட் அணிந்து கொண்டு பேசும் வசனம் பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே நெகிழ வைக்கும் வகையில் இருந்தது.அது மட்டுமில்லாமல் அந்த படத்தில் இருந்த சில மார்பகம் குறித்த ஆபாச வசனத்திற்கு இணையத்தில் சிலர் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.

malavika mohanan siddhant chaturvedi yudhra

இந்தி படத்தில் இப்படியா: தங்கலான் படத்தில் ஜாக்கெட் இல்லாமல் நடித்ததே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை மாளவிகா மோகன், இந்தியில் யுத்ரா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார்.இந்த படத்தில் சித்தாந்த் சதுர்வேதி ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீ தேவி கடைசியாக நடித்த மாம் படத்தை இயக்கிய ரவி உத்யவார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஓவர் கவர்ச்சி: இந்த படத்தின் முதல் பாடலான சாடியா என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் ஹீரோ சித்தாந்த் சதுர்வேதியுடன், பிகினி உடையில் கடற்கரையில் படு நெருக்கமான முத்தக் காட்சிகள் பல கசமுச காட்சிகளிலும் நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இதைப்பார்த்த இணையவாசிகள் தமிழில் மட்டும் இழுத்துப்போர்த்தி நடித்துவிட்டு, இந்தியில் இப்படி கவர்ச்சி காட்டலாமா என்றும், தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்றும் கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

malavika mohanan siddhant chaturvedi yudhra

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X