மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் பாணியில் மாளவிகா மோகனன்.. தீயாய் பரவும் போட்டோ!

Recommended Video

Master Movie Making | Andrea | Lokesh Kanagaraj | Malavika Mohanan

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஸ்டைலில் நடத்தியிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் நடிகர் விஜயின் படம் மட்டும் 3டி எஃபெக்ட்டில் இடம் பெற்றிருந்தது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

சில்வர் நிற உடை

சில்வர் நிற உடை

இந்நிலையில் அப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மாளவிகா மோகனன் ஃபர்ஸ்ட் லுக் பாணியில் போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். சில்வர் நிற ஜொலிக்கும் உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

இன்ஸ்டா பக்கத்தில்

சமீப காலமாக அடிக்கடி போட்டோ ஷுட்களை நடத்தி வரும் மாளவிகா மோகனன் அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடத்தியிருக்கும் போட்டோ ஷுட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் எஃபெக்ட்டா

அதனை பார்த்த நெட்டிசன்கள் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போன்ற ஸ்டைலில் அசத்தலாக இருக்கிறீர்கள் என புகழ்ந்து வருகின்றனர். பலர் என்ன மாஸ்டர் எஃபெக்ட்டா என கேட்டு வருகின்றனர்.

பாவாடை தாவணி

மாளவிகா மோகனனின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. அண்மையில் பிங்க் நிற தாவணியில் அசத்தலாக போட்டோக்களை ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோக்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X