அடேங்கப்பா.. மாளவிகா மோகனன் இத்தனை கோடிக்கு அதிபதியா? வாய்பிளக்கும் ரசிகர்கள் !

சென்னை : நடிகை மாளவிகா மோகனனின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

ரஜினியின் பேட்ட படத்தில் அறிமுகமாகி மாஸ்டரில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, ஒரே படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார் மாளவிகா.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை யூ.கே மோகனன் பாலிவுட் படங்களின் பிரபல ஒளிப்பதிவாளராவார். மாளவிகா பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் முடித்துள்ளார். நடிகை மாளவிகா 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை யூ.கே மோகனன் பாலிவுட் படங்களின் பிரபல ஒளிப்பதிவாளராவார். மாளவிகா பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் முடித்துள்ளார்.

மலையாள படத்தில்

மலையாள படத்தில்

மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட மாளவிகா மோகனன் சர்வதேச அளவிலான ஃபேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து, 2013 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மலையாளத் திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இதையடுத்து, பகத் பாசிலுக்கு ஜோடியாக நலே படத்தில் பழங்குடியினப் பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மலையாளத் திரைப்படங்களில் நடித்த மாளவிகா, ரஜினியின் பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமானார். தற்போது தமிழ் திரையுலகில் இவரது கொடிதான் உயரே பறந்துகொண்டிருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இத்தனை காரா ?

இத்தனை காரா ?

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனனின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் கார் வைத்துள்ளார் இதன் மதிப்பே திட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும், வெள்ளை நிறத்தில் பேன்ஸ் எஸ் கிளாஸ் மாடல் கார் வைத்துள்ளார் இதன் மதிப்பு திட்டத்தட்ட ஒன்றரை கோடிக்கு மேலாகும். அதேபோல, மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான பங்களாவை சொந்தமாக வைத்துள்ளார். தற்போது குடும்பத்துடன் பூர்வீகமான கேரளாவின் பையூரில் வசித்து வருகிறார்.

7 கோடியா ?

7 கோடியா ?

மாளவிகா மோகனனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 7 கோடி மேல் இருக்கும் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட மாளவிகாவின் ரசிகர்கள் அம்மணி திரைத்துறைக்கு நடிக்க வந்ததே 2013ல் தான் அதுக்குள்ள இந்தனை கோடிக்கு அதிபதியா என ரசிகர்கள் வாய் பிளந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X