Malavika Mohanan: தங்கலான் டப்பிங்கை முடித்த மாளவிகா.. அதிரடி வீடியோ வெளியிட்டு உற்சாகம்!
சென்னை: நடிகர் விக்ரம் -இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின ஸ்பெஷலாக படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் தன்னை இணைத்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொன்னியின் செல்வன் படம் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு பிரத்யேக கவனம் பெற்று பாராட்டுக்களையும் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிக்கலில் துருவ நட்சத்திரம்: இந்தப் படம் தொடர்ந்து ரிலீஸ் ஆவதில் சிக்கலுக்குட்பட்டு வருகிறது. கவுதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார் விக்ரம். சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார்.
தங்கலான் படம்: படத்தில் சியான் விக்ரமின் வித்தியாசமான கெட்டப் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. இதேபோல படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனனின் கெட்டப்பும்ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன. படத்தில் இவர்களுடன் பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகினற்ன.
டப்பிங்கை நிறைவு செய்த மாளவிகா: படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து தனிக்கவனத்துடன் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் வேலைகளை தான் நிறைவு செய்துள்ளதாக மாளவிகா மோகனன் அப்டேட் தெரிவித்துள்ளார். படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் அவர் நடித்துள்ள நிலையில் தற்போது ஆக்ஷன் காட்சிகளில் தான் நடித்துள்ள காட்சிகளுக்கு டப்பிங் செய்யும் வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆக்ஷனுடன் இந்தக் காட்சிகளுக்கு அவர் டப்பிங் செய்வது பார்ப்பவர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
வித்தியாசமான கெட்டப்: விக்ரம் எப்போதுமே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இதேபோல ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான கதைக்களங்களில் படங்களை கொடுத்து வருபவர் பா ரஞ்சித் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ளது தங்கலான். இந்தப் படத்தில் வயதான மற்றும் இளைஞராக விக்ரம் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக நீண்ட தாடி, தலைமுடி, மீசை சகிதம் அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். படத்தின் டீசரில் அவரை வித்தியாசமாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இதேபோல படத்தில் மாளவிகாவும் ரசிகர்களை கொண்டாட செய்வார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











