பேட்ட படத்தின் போது ரஜினிக்காந்த் விவாதித்த சுவாரசியமான விஷயம்.. மனம் திறந்த மாளவிகா மோகனன்!

சென்னை: பேட்ட படத்தின் போது நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் விவாதித்த ஒரு விஷயம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் மனம் திறந்து பேசியுள்ளார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, கன்னட படங்களை தொடர்ந்து தமிழிலும் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்தப் படத்தில் பூங்கொடி மாலிக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் படம் முழுக்க கடைசி வரை வருவார் மாளவிகா மோகனன்.

பேட்ட படத்திற்கு பிறகு

பேட்ட படத்திற்கு பிறகு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். அந்தப் படம் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

பலரும் வேண்டாம் என்றார்கள்

பலரும் வேண்டாம் என்றார்கள்

இந்நிலையில் பேட்ட படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினிகாந்துடன் பழகிய அனுபவம் குறித்தும் பேசியுள்ளார் மாளவிகா மோகனன்.அவர் பேசியதாவது, பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தபோது, அது ஒரு சிறிய கதாப்பாத்திரம் என்பதால் அந்த படம் வேண்டாம் என்று பலரும் சொன்னார்கள்.

தவற விட்டிருப்பேன்..

தவற விட்டிருப்பேன்..

அதைக் கேட்டு நான் லீடிங் ரோலில் முக்கிய வேடங்களை மட்டுமே ஏற்பேன் என்று கூறி, இந்தப் படத்தை வேண்டாம் என்று சொல்லியிருந்தால், இதுபோன்ற ஒரு அழகான படத்தை நான் தவற விட்டிருப்பேன். எனக்கு ஒரு சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் கூட நான் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது.

இனியொரு வாய்ப்பு..

இனியொரு வாய்ப்பு..

நானும் ரஜினிகாந்த் சாருடன் நடிக்க விரும்பினேன். அவருடன் பணியாற்ற எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை என்றார் மாளவிகா மோகனன். மேலும் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்துடன் உரையாடியது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளர் இந்த பேட்ட நடிகை.

மறக்க மாட்டேன்

மறக்க மாட்டேன்

அவர் கூறியதாவது, ரஜினி சார் கிரியா யோகாவை எவ்வாறு பயிற்சி செய்கிறார் என்பது பற்றி என்னிடம் கூறினார். நாங்கள் தியானம் மற்றும் ஆன்மீகம் பற்றி நிறைய பேசினோம். நான் அவருடன் பல உரையாடல்களைக் கொண்டிருந்தேன், அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன், அவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளாக மாறிவிட்டன.

தமிழ் பேச வராது

தமிழ் பேச வராது

மேலும், இந்த ஒரு விஷயத்தையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதாவது பேட்ட படத்தில் திரையில் என் அப்பா இறந்த பிறகு ஒரு நீண்ட மோனோலோக் எனக்கு இருந்தது. இதனால் நான் பதற்றமடைந்தேன். எனக்கு அந்தளவுக்கு தமிழ் பேச வராது என்பது அவருக்கு தெரியும்.

Recommended Video

Master Team special Wishes to Thalapathy Vijay | Malavika Mohanan, Anirudh
உயர்ந்த ஒரு விஷயம்

உயர்ந்த ஒரு விஷயம்

அந்தக் காட்சி முடிந்தவுடன், அவர் எனக்காக கைதட்ட ஆரம்பித்தார். எனக்காக யார் அதைச் செய்கிறார்கள்? என்று தோன்றியது. ரஜினி சார் போன்ற ஒருவர் உங்களுக்காக கைதட்டுவது மிகவும் அருமையான விஷயம். இது என் வாழ்வில் மிகவும் உயர்ந்த ஒரு விஷயம்.. இவ்வாறு நடிகை மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X