விஜய் சேதுபதி மற்றும் அனிருத்திடம் இருந்து இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.. மாஸ்டர் ஹீரோயின் பளீச்!
சென்னை: விஜய் சேதுபதி மற்றும் அனிருத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என நடிகை மாளவிகா மோகனன் பளிச்சென தெரிவித்துள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன், ரஜினி, விஜய் என மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றதால் லக்கி நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார்.
தமிழில் முதல் படத்திலேயே ரஜினியுடன் நடித்தார் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படம்
கடந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் மாளவிகா மோகனனின் நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

போட்டோ ஷேர்
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்கள் மூலம் ரசிகர்களை என்டெர்டெய்ன் செய்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இந்நிலையில் லாக்டவுனுக்கு முன்பு நடைபெற்ற மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச்சில் எடுக்கப்பட்ட போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மாளவிகா மோகனன்.

விக்டரி சிம்பள்
அதில் தன்னுடைய க்யூட் எக்ஸ்பிரஷன்களுடன் போட்டோவுக்கு விக்டரி சிம்பளுடன் போஸ் கொடுத்துள்ளார். அவருக்கு அருகில் விஜய் சேதுபதியும் அனிருத்தும் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் விஜயை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றனர்.

கற்றுக்கொள்ள வேண்டும்
இந்நிலையில் இந்த போட்டோவை ஷேர் செய்துள்ள மாளவிகா மோகனன், நிகழ்ச்சிகளின் போது, முகத்தை நேராக வைக்க முடியவில்லை, விஜய் சேதுபதி சார் மற்றும் அனிருத்திடம் இருந்து அதனை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது இந்த போட்டோ 27 ஆயிரத்துக்கும் மேற்ப்டட லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











