வெறும் முண்டா பனியனுடன் .. மாஸ்டர் பட நாயகியின் வேற லெவல் பிக்ஸ் !
சென்னை : உலக அளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் மாளவிகா மோகனன்.
தமிழில் பேட்ட படத்திற்கு பிறகு இவர் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பல்வேறு புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வரும் மாளவிகா தற்பொழுது சட்டை இல்லாமல் வெறும் முண்டா பனியனுடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பாராட்டுகளை ஏந்தி வருகிறது.

கேயூ மோகனன்
இந்திய அளவில் தரமான திரைப்படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றுள்ள மலையாள திரையுலகில் சமீபத்தில் கலக்கி வருபவர் நடிகை மாளவிகா மோகனன். மகர்ஷி,அந்தாதுன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் கேயூ மோகனன் உடைய மகளான இவர் தற்போது தமிழிலும் காலடி எடுத்து வைத்து நடித்த இரண்டாவது படமே இன்னும் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மிகப்பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

ரசிகர்களுக்கு அறிமுகத்தை
மலையாளத் திரையுலகின் கனவு கண்ணன் என பலராலும் அழைக்கப்பட்டு வரும் துல்கர் சல்மான் உடன் பட்டம் போலே என்ற தனது முதல் படத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு அறிமுகத்தை கொடுத்த மாளவிகா மோகனன் தற்பொழுது நடித்த ஓரிரு படங்களிலேயே தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இரண்டாவது படத்திலேயே
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மாளவிகா தற்பொழுது இரண்டாவது படத்திலேயே தளபதி விஜயுடன் இணைந்து நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

படத்திற்கான எதிர்பார்ப்பு
மாஸ்டர் படத்தைப் பற்றிய அப்டேட் அவ்வப்போது தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. மேலும் படத்தை சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட கைதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி இருப்பதால் ஆர்வம் மேலும் கூடியிருக்கிறது.

அட்டகாசமான புகைப்படம்
மாஸ்டர் படத்தின் பாடல்களை தவிர எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு இதுவரை அறிவிக்காத நிலையில் விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்து வருகின்ற நிலையில் தற்போது மாளவிகா மோகனன் அதை எல்லாம் போக்கும் விதமாக ஒரு அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கண்களுக்கு விருந்து
ஏற்கனவே கோடை வெயில் மற்றும் கோடை மழை ஒருசேர நம் அனைவரையும் கதிகலங்க வைத்து வரும் நிலையில் தற்போது மாளவிகா மோகன் தன்னுடைய படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

பச்சை கலர் லுங்கி
வீட்டில் வெறும் பச்சை கலர் லுங்கி போன்ற ஒரு உடையையும், மேலே ஒரே ஒரு வெள்ளை நிற முண்டா பனியனையும் மட்டும் அணிந்து கொண்டு இதுவரை யாரும் பார்த்திராத வகையில் கவர்ச்சி கடலில் அனைவரையும் நீந்த வைத்துள்ளார் நம்ம மாளவிகா. மாஸ்டர் படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் மாளவிகாவின் இந்த புகைப்படத்தை பார்த்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











