பெண்கள்தான் அதை செய்யணுமா? விஜய் ரசிகர் வெளியிட்ட கார்டூன்.. கடுப்பான மாளவிகா மோகனன்.. பதில பாருங்க!

சென்னை: விஜய் ரசிகர் வெளியிட்ட கார்ட்டூனால் செம கடுப்பாகி இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

Recommended Video

Video: Malavika Mohanan Bike racing | Master

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு என பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷுட்டிங், போஸ்ட் புரொடெக்ஷன் என அனைத்தும் நிறைவடைந்து ரிலீஸ்க்காக காத்திருக்கின்றனர்.

உயிர்தான் முக்கியம்

உயிர்தான் முக்கியம்

கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ரிலீஸ் செய்யப்பட முடியாமல் உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ரசிகர்களின் கேள்விக்கு தற்போது உயிருடன் இருப்பதுதான் முக்கியம் என கூறி வருகிறார் படத்தின் இயக்குநர்.

மாஸ்டர் டீம் கார்ட்டூன்

மாஸ்டர் டீம் கார்ட்டூன்

இந்நிலையில் கொரோனா குவாரண்டைன் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள், கார்ட்டூன்கள், ட்ரோல் வீடியோக்கள் என வலைய வருகின்றனர். அந்த வகையில் விஜய் ரசிகர் ஒருவர், குவாரண்டைன் நேரத்தில் மாஸ்டர் டீம் என்ற ஒரு கார்ட்டூனை ஷேர் செய்திருந்தார்.

சமைக்கும் மாளவிகா

சமைக்கும் மாளவிகா

அதில் விஜய், விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ் கனகராஜ் என பலரும் அவரவர் வேலையை பார்ப்பது, லேப்டாப்பில் வேலை செய்வது, விளையாடுவது என இருக்கின்றனர். ஆனால் மாளவிகா மோகனன் சமையல் செய்வது போல் உள்ளது அந்த கார்ட்டூன்.

கடுப்பான ஹீரோயின்

கடுப்பான ஹீரோயின்

இந்த கார்ட்டூனை ஷேர் செய்த விஜய் ரசிகர், அதனை விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ் உட்பட மாஸ்டர் டீமை சேர்ந்த பலருக்கும் டேக் செய்துள்ளார். இந்நிலையில் இந்த கார்ட்டூனை பார்த்து செம காண்ட்டாகி இருக்கிறார் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.

எப்போது சாகும்?

எப்போது சாகும்?

இந்த கார்ட்டூனை பார்த்து பதில் கூறிய அவர், ஒரு கற்பனையான "மூவி ஹவுஸில்" கூட ஒரு பெண்ணின் வேலை சமைப்பதுதானா? பெண்கள்தான் இதுபோன்ற வேலையை செய்ய வேண்டும் என்ற பாலின பாத்திரங்கள் எப்போது சாகும் என கேட்டு ச்சை என பதிவிட்டார்.

ஏன் நீக்கிவிட்டீர்கள்?

ஏன் நீக்கிவிட்டீர்கள்?

ஆனால் சிறிது நேரத்திலேயே தனது பதிவை நீக்கிவிட்டார் மாளவிகா மோகனன். ஆனாலும் அவரது பதிவின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை தனது பக்கத்தில் ஷேர் செய்த ரசிகை ஒருவர்? உங்களால் ஏன் உங்கள் கருத்தில் நிற்கவில்லை என கேட்டுள்ளார்.

பாடகி சின்மயி

பாடகி சின்மயி

இதேபோல் பாடகி சின்மயி பதிவிட்டுள்ள டிவிட்டில் தனது 'பாத்திரத்தை' விரும்பாத வகையில் ரசிகர் சித்தரித்தது குறித்து ஒரு நடிகை கேள்வி எழுப்புகிறார். தனது ட்வீட்டை நீக்கக்கோரி அவர் வசைப்பாட பட்டிருப்பார். பாலியல் ரீதியான 'கார்ட்டூன்' 1000 ரீட்வீட்ஸை நெருங்குகிறது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X