Malavika mohanan: மாளவிகா மோகனனின் க்யூட் புகைப்படம்.. யார் எடுத்ததுன்னு பாருங்க!

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது தமிழ்ப்பட என்ட்ரியே சிறப்பாக அமைந்தது. பேட்ட படத்தில் ரஜினியின் நண்பர் சசிக்குமாரின் மனைவியாக நடித்து அதிரடி கிளப்பியிருந்தார். இந்த கேரக்டர் சிறிது நேரமே வந்தாலும் படத்தில் முக்கியமானதாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் மாளவிகா.

விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ்டன் மாறன் படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்த மாளவிகா மோகனன், தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்தில் மாளவிகா மோகனனுக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Actress Malavika mohanan s cute picture shared in Instagram

நடிகை மாளவிகா மோகனன்: நடிகை மாளவிகா மோகனன் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதல் படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், சசிக்குமார் இவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்தப் படத்தில் இவரது கேரக்டர் சிறியதாக இருந்தாலும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்திருந்த மாளவிகா மோகனன், தனுஷுடன் மாறன் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் -விக்ரம் காம்பினேஷனில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தங்கலான் படம்: சுதந்திர போராட்ட காலத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் கதைக்களத்தில் உருவாகியுள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் மாளவிகா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பழங்குடியின பெண்ணாக இவரது தோற்றம் வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது. தொடர்ந்து பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன், யுத்ரா என்ற படத்தில் நடித்து வருவதுடன் அடுத்ததாக ரன்பீர் கபூருடன் அனிமல் 2 படத்திலும் மாளவிகா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாளவிகா க்யூட் புகைப்படம்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் மாளவிகா மோகனன். இன்ஸ்டாகிராமில் இவரது அடுத்தடுத்த புகைப்படங்கள், போட்டோஷுட் போட்டோஸ், வீடியோக்கள் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடற்கரை ரிசார்ட்டில் பிகினி உடையுடன் மாளவிகா மோகனன் செல்ஃபி எடுத்தபடி நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்றது. இந்நிலையில் தற்போது அதே பீச் ரெசார்ட்டில் மற்றொரு க்யூட் புகைப்படத்தை எடுத்து ஷேர் செய்துள்ளார் மாளவிகா மோகனன்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: இந்த புகைப்படத்தை அவரது அப்பா எடுத்துள்ளதாக மாளவிகா குறிப்பிட்டுள்ளார். இவர் பிரபல மலையாளப்பட ஒளிப்பதிவாளர் கேயூ மோகனனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய அப்பாவை போலவே ஒளிப்பதிவாளராக அல்லது இயக்குநராகும் ஆர்வத்தில் இருந்த மாளவிகாவை நடிக்க சம்மதிக்க வைத்தது நடிகர் மம்முட்டி. அவர்தான் தன்னுடைய மகன் துல்கருடன் நடிக்க மாளவிகாவை சம்மதிக்க வைத்தவர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மாளவிகா மோகனனை இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X