Malavika Mohanan: ஜொலிக்கும் உடையில் மாளவிகா புகைப்படங்கள்.. ரசிகர்களை கவர என்னவெல்லாம் செய்யறாரு!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் முதல் படத்திலேயே ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து பாராட்டு பெற்றவர்.
தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம் என அடுத்தடுத்த தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முடித்துள்ளார்.

தற்போது விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தை சொல்லும் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
நடிகை மாளவிகா மோகனன்: நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து என்ட்ரி கொடுத்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் தனுஷுடன் மாறன் படத்திலும் இவர் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் -விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார்.
தங்கலான் படம்: சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சில ஆக்ஷன் காட்சிகளிலும் மாளவிகா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் இவருக்கு வெயிட்டான கேரக்டர் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தாலும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது நடிப்பில் அதிகமான படங்கள் வெளியாகவில்லை.
தீபாவளி போட்டோஷுட்: மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பாலிவுட்டிலும் யுத்ரா என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். தொடாந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் மாளவிகா மோகனன். இவரது அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தீபாவளியையொட்டி ஜொலிக்கும் தங்கநிற புடவையில் சிறப்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் வரவேற்பு: மலையாளத்தில் பிரபலமான நடன இயக்குநரின் மகள் என்ற அடையாளத்தின்மூலம்தான் மாளவிகாவிற்கு நடிக்க சான்ஸ் கிடைத்தது என்றபோதிலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் அதிகமான பட வாய்ப்புகளை ஈர்த்து வருகிறார் மாளவிகா. அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
ஏராளமான லைக்ஸ்: பாலிவுட்டின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ள இந்த ஆடையை இந்த தீபாவளியையொட்டி அணிவதில் தான் மிகவும் பெருமையடைவதாகவும் மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











