Malavika Mohanan: குளக்கரையில் காத்திருக்கும் தேவதை.. மாளவிகா மோகனனின் காத்திருப்பு யாருக்கோ!

கொச்சி: தமிழில் பேட்ட படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டில் மலையாளப்படத்தில் நடித்து தன்னுடைய சினிமா என்ட்ரியை துவங்கிய மாளவிகா, தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

Actress Malavika mohanans new photoshoot pictures attracts fans

நடிகை மாளவிகா மோகனன்: நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2013ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான பட்டம் போலெ என்ற படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். முதல் படத்திலேயே துல்கர் சல்மானுக்கு நாயகியாக என்ட்ரி கொடுத்த மாளவிகா, தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப்படங்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை மோகனன் மலையாள திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்.

மலையாளத்தில் அறிமுகம்: பட்டம் போலெ படத்தை தொடர்ந்து நிர்ணநாயகம், தி கிரேட் பாதர் மற்றும் நானு மட்டு வரலக்ஷமி போன்ற படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த மாளவிகா மோகனன் தமிழில் முதல் படத்திலேயே நடிகர் ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடாந்து நடிகர் விஜய், தனுஷ், விக்ரம் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழில் அறிமுகம்: பேட்ட படம் வெளியான 2019ம் ஆண்டிலேயே விஜய்யுடன் மாளவிகா நடித்திருந்த மாஸ்டர் படமும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பேராசிரியையாக நடித்து விஜய்யின் செயல்பாடுகளில் ஒத்துழைக்கும் கேரக்டரில் மாளவிகா நடித்திருந்தார். இந்தப் படம் இவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actress Malavika mohanans new photoshoot pictures attracts fans

வித்தியாசமான கேரக்டர்கள்: சமீபத்தில் மாளவிகா நடிப்பில் வெளியான கிறிஸ்டி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்காமல் சவாலான கேரக்டர்களில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அழுத்தமான கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்துவரும் மாளவிகா மோகனன், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

வித்தியாசமான போட்டோஷுட்: இந்நிலையில் தற்போது கேரளாவில் குளத்தங்கரையில் மாளவிகா மோகனன் எடுத்துள்ள போட்டோஷுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் இந்தப் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. இந்தப் புகைப்படங்களை லட்சக்கணக்கான ரசிகர்களை லைக் செய்துள்ளனர். கடவுளின் தேசத்தில் உலக அழகி என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X