Malavika Mohanan: புடவையில் கவர்ச்சி காட்டி அசத்திய மாளவிகா மோகனன்.. வேற லெவல்!

சென்னை: நடிகர் விக்ரம் -இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின ஸ்பெஷலாக படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

Actress Malavika mohanans new photoshoot pictures makes fans interesting

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

நடிகை மாளவிகா மோகனன்: தமிழ், மலையாள படங்களில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். கடந்த 2019ம் ஆண்டில் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் இவரது கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மூக வலைதளங்களில் ஆக்டிவ்: சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த மாளவிகா மோகனன், தனது தந்தை மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுவரும் மாளவிகா நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான கிறிஸ்டி படம் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் மாளவிகா. தொடர்ந்து தன்னுடைய படங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார்.

தங்கலான் படம்: தற்போது மாளவிகா விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள தங்கலான் படத்தில் அவரது கெட்டப் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன. படத்தில் இவர்களுடன் பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகினற்ன.

டப்பிங்கை நிறைவு செய்த மாளவிகா: படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து தனிக்கவனத்துடன் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் வேலைகளை தான் நிறைவு செய்துள்ளதாக மாளவிகா மோகனன் அப்டேட் தெரிவித்துள்ளார். படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் அவர் நடித்துள்ள நிலையில் தற்போது ஆக்ஷன் காட்சிகளில் தான் நடித்துள்ள காட்சிகளுக்கு டப்பிங் செய்யும் வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆக்ஷனுடன் இந்தக் காட்சிகளுக்கு அவர் டப்பிங் செய்வது பார்ப்பவர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

புதிய போட்டோஷுட்: இந்நிலையில் மாளவிகா மோகனன் தற்போது அழகான ஸீ-த்ரூ புடவையில் அட்டகாசமான போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கான கேப்ஷனில் மனீஷ் மல்ஹோத்ராவின் கைவண்ணத்தில் உருவாகும் புடவைகள் தனனை எப்போதும் செக்ஸியாக காட்டுவதாகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மைதான் என்று ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X