Malavika Mohanan: கண்ணாடி முன்னாடி.. மாளவிகா மோகனனின் க்யூட் கிளிக்ஸ்.. அட கையில கிளாஸ் வேறயா?

சென்னை: தமிழில் அறிமுகப் படத்திலேயே சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடித்து கலக்கியவர் நடிகை மாளவிகா மோகனன். படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்தப் படத்தை தொடர்ந்தும் முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு மாளவிகா வீட்டுக் கதவை தட்டியது. அடுத்தப்படத்திலேயே நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து அதிரடி காட்டினார். இந்தப் படத்தில் சிறிது நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட மாளவிகா மோகனன் தொடர்ந்து தனுஷுடனும் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா. இந்தப் படம் சுதந்திர போராட்டக் காலகட்டத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக அமைந்துள்ள நிலையில், படத்தில் மாளவிகாவிற்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அதிகமான பட வாய்ப்புகளை ஈர்த்து வருகிறார் மாளவிகா மோகனன். அடுத்தடுத்த கவர்ச்சி புகைப்பட சூட்களை எடுத்து அதன் புகைப்படங்களில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஏராளமான லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

Actress Malavika mohanan s recent clicks shared in Instagram

நடிகை மாளவிகா மோகனன்: நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தமிழில் முதல் படத்திலேயே நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. படத்தில் சசிக்குமாரை காதலித்து திருமணம் செய்வதாகவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் கதைக்களமாக கொள்ளப்பட்டிருந்தது. சிறிய ரோலாக இருந்தாலும் இந்தப் படத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் மாளவிகா மோகனன். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி: இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியையாக நடித்திருந்தார். அதற்கேற்ப அவரது லுக் சிறப்பாக மற்றும் டீசண்டாக அமைந்திருந்தது. விஜய்யின் வாழ்க்கை மாற்றத்திற்கு இந்த கேரக்டர் உதவுவதாக படத்தில் காட்டியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படங்களை தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இதனிடையே மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி படம் அதிகமான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் தன்னைவிட வயதில் சிறியவரை காதலிக்கும் கேரக்டரில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

தங்கலான் படத்தில் மாளவிகா: இந்நிலையில் அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகாவிற்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் கடந்த ஜனவரியிலேயே வெளியாகவிருந்த நிலையில் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் கோலிவுட்டில் மேலும் பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மாளவிகா காத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இதனிடையே சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 40 லட்சம் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மாளவிகா. தற்போது கண்ணாடி முன்பு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான உடைகளில் இந்தப் புகைப்படங்களில் க்யூட்டாக காணப்படுகிறார் மாளவிகா. இதில் ஒரு புகைப்படத்தில் கையில் கிளாசுடன் காணப்படுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X