கையில் சரக்குடன் ஃபிரன்டை கட்டிப்பிடித்த நடிகை மாளவிகா.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை மாளவிகா கையில் சரக்குடன் இருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.
நடிகை மாளவிகா தமிழில் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே, வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா.

உடற்பயிற்சி போட்டோக்கள்
பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

கையில் சரக்குடன்
அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். அதாவது பார்ட்டியில் பங்கேற்றுள்ள மாளவிகா கையில் சரக்குடன், தனது தோழியுடன் நெருக்கமாக உள்ளார்.
எப்பவுமே ஹாட்டுதான்
இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எப்பவுமே நீங்க ஹாட்டுதான் என தெரிவித்துள்ளனர்.

வைரலாகும் போட்டோ
மேலும் சிலர் என்ன மேடம் கையில சரக்கோட கிளம்பிட்டிங்க என்றும் கேட்டு வருகின்றனர். மாளவிகாவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











