12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி ஆகும் பிரபல நடிகை... யாருக்கூடன்னு பாருங்க!
சென்னை: தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை மாளவிகா. தமிழில் அஜித் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்என பல மொழிகளில் நடித்து வந்தார். சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார் நடிகை மாளவிகா.

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
வெற்றிக்கொடிக்கட்டு படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா. இதில் இடம்பெற்ற கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடலுக்கு நடனமாடி பெரும் பிரபலமானார். பல படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார் மாளவிகா. மாளவிகா நடனமாடிய வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலும் செம ஹிட்டானது.

சினிமாவை விட்டு விலகினார்
சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்தார் நடிகை மாளவிகா. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த மாளவிகா கர்ப்பமானதும் சினிமாவை விட்டு விலகினார்.

12 ஆண்டுகள் கழித்து
தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீவா, சிவா நடிக்கும் கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை மாளவிகா. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மாளவிகா, தான் தமிழில் கடைசியாக விஜய்யின் குருவி படத்தில் நடித்ததாக கூறியுள்ளார்.

நல்ல கதாபாத்திரமாக இருந்தால்..
முதல் குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் தாயானதாக கூறியுள்ள மாளவிகா அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளார். மீண்டும் நடிப்பதாக இருந்தால் நல்ல கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது
அப்போதுதான் கோல்மால் பட வாய்ப்பு கிடைத்தது என்றும் இதில் ஜீவாவின் பாஸாக நடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார் மாளவிகா. கோல்மால் படத்தில் தனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருப்பதாக கூறியுள்ள மாளவிகா, 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











