அதே சிரிப்பு.. அதே அழகு.. எல்லாமே அப்படியே.. சும்மா அள்ளுறாரே மாளவிகா!

சென்னை : நடிகை மாளவிகா தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை மாளவிகா இவரின் முழு பெயர் சுவேதா கோனுர். இவர் பெங்களுரில் பிறந்தார், ஃபேரன் லவ்லி விளம்பரத்தில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான உன்னை தேடி திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் இவருக்கு ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

மாளவிகா அடுத்தாக தமிழில், ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூ பறிக்க வருகிறோம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இந்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியை தராததால், தமிழ் திரைப்படங்களில் இருந்து சற்று விலகி இருந்தார். அதன் பிறகு இவர் தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

 நல்ல பெயர்

நல்ல பெயர்

சேரன் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளிவந்த வெற்றிகொடிக்கட்டு படம் இவருக்கு நல்லபெயரை வாங்கித் தந்தது. மேலும், இந்த படத்தில் வரும் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு பெரிதாக வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.

கெஸ்ட்ரோல்

கெஸ்ட்ரோல்

கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு எதுவும் வராததால், சிறிய கதாப்பாத்திரங்களை ஏற்று கெஸ்ட்ரோலில் நடிக்க ஆரம்பித்தார். பேரழகன் படத்தில் அம்புலி மாமா அம்புலி மாமா பாடல், வசூல்ராஜா, ஐயா, சந்திரமுகி, நான் அவன் இல்லை, சபரி ஆகிய படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தார் மாளவிகா.

குத்தாட்டம்

குத்தாட்டம்

மாளவிகா திரைப்படங்கள் மட்டுமல்லாது சில முன்னணி நடிகர்களின் திரைபடத்தில் குத்தாட்டமும் ஆடியிருக்கிறார். வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலிலே மாளவிகாவின் கவர்ச்சிகரமான ஆட்டத்தை ரசிகர்கள் மறந்துவிடவில்லை.. அவரின் இடை நளினமும், ஈட்டி போன்று பாயும் மாளவிகாவின் கண் அசைவும் மாளவிகா ரசிகர்களின் இதயத்தில் இன்றளவும் இடம்பெற்று இருக்கிறது.

நடிக்கவில்லை

நடிக்கவில்லை

2007ம் ஆண்டு தொழிலதிபர் சுமேஷ் மேனன் என்பவரை மாளவிகா திருமணம் செய்துகொண்டார். பின்னர் மும்பையில் செட்டில் ஆகி விட்டார். இதையடுத்து, நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு குடும்ப குத்துவிளக்காக மாறிய மாளவிகாவுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் என இரண்டு அழகான குழந்தைகள் இருக்கிறார்கள்.

 குறையாத அழகு

குறையாத அழகு

இந்நிலையில் சமீபத்தில் மாளவிகா தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும் அப்படியே இருக்கீங்க, இன்னும் உங்க அழகு குறையவே இல்லை என்று கருத்து தெரிவித்து லைக்குகளை போட்டு வருகின்றனர். மாளவிகா சினிமாவிற்கு திரும்பி கால் பதிக்க வருவார்களா என ஏங்கி தவிக்கும் அவரின் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா? மாளவிகா. தனது ரசிகர்களை குஷி படுத்த மீண்டும் திரைத்துறைக்கு வருவாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X