ஆத்தி.. திருட்டுப்பயலே மாளவிகாவை ஞாபகம் இருக்கா?.. இந்த வயதிலும் எப்படி பேலன்ஸ் பண்றாங்க பாருங்க!

சென்னை: அஜித்தின் உன்னைத் தேடி படத்தின் மூலம் 1999ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா இந்த வயதிலும் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

வெற்றிக் கொடி கட்டு படத்தில் இவர் நடனமாடிய கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு பாடலை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். அதன் பின்னர், சித்திரம் பேசுதடி படத்தில் வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் மஞ்சள் சேலையை அணிந்து கொண்டு மரண குத்தாட்டம் போட்டிருப்பார்.

Actress Malavikas latest workout video stuns K Town fans

திருட்டுப்பயலே, நான் அவனில்லை, மச்சக்காரன், குருவி உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா கடைசியாக தமிழில் 2009ல் வெளியான ஆறுபடை படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

மீண்டும் கோலிவுட்டில்: விரைவில் வெளியாக உள்ள கோல்மால் எனும் படத்தில் மங்கம்மா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தப் போகும் மாளவிகா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார்.

44 வயதிலும் எப்படி இருக்காரு பாருங்க: சுமேஷ் மேனன் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட மாளவிகா அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்டார். ஒரு சில படங்களில் கேமியோவாக மட்டுமே வந்து சென்றார். ஸ்வேதா கொன்னூர் மேனன் எனும் இயற்பெயர் கொண்ட மாளவிகா தொடர்ந்து அதே பெயரில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார். 44 வயதிலும் தனது ஆரோக்கியத்தை பேணுவதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.

வொர்க்கவுட் வீடியோ: சமீபத்தில் மாளவிகா வெளியிட்ட வொர்க்கவுட் வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. யோகா மேட்டில் இரு கைகளையும் தரையில் ஊன்றி கால்கள் இரண்டையும் தலைக்கு மேல் தூக்கி சிரசாசனம் செய்து மிரள விட்டுள்ளார்.

மேலும், பக்காவாக பேலன்ஸ் செய்ய இரு புறமும் டைல்ஸ் கற்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த உடலையும் தூக்கி சீஸா ஆடுவது போல அவர் செய்த ஆசனமும் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X