அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு நடிகை... வெளியான பகீர் தகவல் !
சென்னை : நடிகை சமந்தாவைப் போல ஒரு நடிகை அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா அரியநோயான மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் தசையில் உள்ள செல்களின் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி சிதைக்கும்.
தசை அழற்சி நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் தசை செல்கள் நிரந்தரமாக அழிந்து இயல்பு வாழ்க்கையே முடங்கும் அபாயம் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா தனது நோய் குறித்து,நோயால் எதிர்கொண்ட துயரங்கள் குறித்தும் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

நடிகை மம்தா மோகன்தாஸ்
நடிகை சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டது குறித்து, துணிச்சலாக வெளியில் சொல்லிய பிறகுதான் பல நடிகைகள் தங்கள் நோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை மம்தா மோகன்தாஸ் ஆட்டோ இம்யூன் எனப்படும் அரியவகை நோயான விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரியவகை நோய்
விட்டிலிகோ நோய் உடலின் நிறத்தை மெல்ல இழக்கச் செய்துவிடும், இந்த நோய் உடலில் கை,கால், தலை, முகம் என பாகத்தின் வேண்டுமானாலும் வரலாம், உடலில் ஆங்காங்கே நிறமிழந்து திட்டுகள் உருவாகும். மேலும், ஆண், பெண் என இருபாலரும் இந்த நோயால் பாதிக்கப்படலாம், இந்த விட்டிலிகோ நோய்க்கு சிகிச்சை இல்லை, ஆனால், நிறம் மாறுவதை வேண்டும் என்றால் தடுக்கலாம்.

பொலிவிழந்து போனா
இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா மோகன்தாஸ், இந்த நோயால் பாதிக்கப்பட்டு பொலிவிழந்து போனா தனது புகைப்படத்தை பகிர்ந்து வேதனை அடைந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள மம்தா மோகன் தாஸ், 2006ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அடுத்தடுத்த படங்களில்
அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான எனிமி படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்திருந்தார். குறைந்த காட்சிகளே வந்தாலும், இவரின் ரோல் நச்சுனு இருக்கும். தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் ஊமை விழிகள், கருமேகங்கள் களைகின்றன என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











