பிகினியில் சிக்ஸ் பேக் வயிற்றை காட்டிய மன்மதன் பட நடிகை.. நடிகர்கள் கூட இவ்வளவு ஃபிட் இல்லையே!

மும்பை : தொகுப்பாளர், பேஷன் டிசைனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத் திறமைக்கொண்ட மந்திரா பேடி 50வயதான போதும் பிகினியில் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார்.

பாலிவுட்டில் தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடங்கியவர் மந்திரா பேடி. இந்தியாவின் புகழ்பெற்ற விளம்பப்பட நடிகைவும் உள்ளார்.

இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் தென்படாமல் இருந்த இவர் தற்போது மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

Actress Mandira bedi hot bikini photos from Maldives

20 வயதில் சினிமாவில் : நடிகை மந்திரா பேடி தனது 20வது வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தார். தூர்தர்ஷனில் வெளியாகி மிகப்பிரபலமடைந்த சாந்தி என்னும் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுக்க பட்டிதொட்டியெங்கும் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறி பிரபலமானார். தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, பாலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மன்மதன் படத்தில் : இந்தியில் மட்டும் பிரபலமாக இருந்த இவர் தமிழில் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நடித்து தமிழ் ஆடியன்சுக்கும் பரீட்சியம் ஆனார். சீரியல், சினிமா, விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்த மந்திரா பேடி1999 ஆம் ஆண்டு ராஜ் கவுசால் என்பவரை மணந்து கொண்டு மும்பையில் தனது இல்லற வாழ்க்கையை தொடங்கினார்.

Actress Mandira bedi hot bikini photos from Maldives

காதல் திருமணம் : மந்திரா பேடி மற்றும் ராஜ் கவுசால் தம்பதிகளுக்கு வீர் கவுசால் என்ற மகனும், தாரா பேடி கௌஷல் என்ற பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்ந்து வருகிறார். மந்திரா பேடியின் கணவர் 2021ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்குகளை இவரே முன் நின்று, மன தைரியத்துடன் செய்து முடித்தார். ராஜ் கவுஷல் மறைவு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Actress Mandira bedi hot bikini photos from Maldives

சிக்ஸ் பேக் : விளம்பரம், மாடலிங் என படு பிஸியான நடிகையாக இருந்த மந்திரா பேடி எப்போது ஹைபர் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர், எப்போதும் தன்னை கவர்ச்சியாகவும், அழகாவும் காட்டிக்கொள்ளும் இவர் மாலத்தீவில் விதவிதமான பிகினியுடன் பீச்சில் ஆட்டம் போட்டுள்ளார். 50 வயதை தொட்டு விட்ட மந்திரா சிக்ஸ் பேக்கில் சும்மா சிக்குனு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் சிலர் தங்கள் வயிற்றை தொட்டுப்பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட்டுள்ளார். வயசு வெறும் நம்பர் தான் என்பதை மந்திரா நிரூபித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X