Manisha Koirala : எப்படி இருந்த மனிஷா கொய்ராலா.. இப்படி மாறிட்டாரே!
சென்னை: நேபாளத்தை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அரச குடும்பத்தை சேர்ந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், அதுதொடர்பான படிப்பை படித்து சினிமாவில் அறிமுகமான இவர், பார்ப்பவர் வியக்கும் அளவிற்கு அழகு பதுமையாக வலம் வந்து, 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்தார். தற்போது, மனிஷா கொய்ராவின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் மனிஷாவா இது என கேட்டு வருகின்றனர்.
நடிகை மனிஷா கொய்ராலா: '1942 love story' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம், பாம்பே படத்தில் மனிஷாவை கமிட் செய்தார். இஸ்லாமியா பெண் கதாபாத்திரத்திற்கு மனிஷா கொய்ராலா மிகவும் பொருத்தமாக இருந்ததால், பாம்பே படம் பெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில், உயிரே, இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற பல படங்களில் நடித்தார். தனது கட்டழகாலும் அசாத்தியமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த, மனிஷா கொய்ராலா 4 பிலிம்பேர் விருதுகளை வாங்கி உள்ளார்.

நோயுடன் போராடினார்: அடுத்தடுத்து படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த மனிஷா, தன்னை விட 7 வயது குறைவான சாம்ராட் டஹால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கை இரண்டு வருடம் நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு Ovarian Cancer பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ரா, அமெரிக்காவிற்கு சென்று புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்தார். கீமோ சிகிச்சை செய்ததால், மொட்டை தலையுடன், உடல் எடை குறைத்து இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இப்படி மாறிட்டாரே: அதிலிருந்து, மீண்டு வந்த மனிஷா கொய்ராலா, கேன்சர் நோயாரால் போராடி வருபவர்களுக்கு ஊக்கமூட்டும் நபராக இருந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை மனிஷா கொய்ராலா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அந்த அழகு தேவதை மனிஷாவா இது என கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த அளவிற்கு கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல், தலைமுடிக்கு எந்த சாயமும் பூசாமல் பேப்பர் சால்ட் லுக்கில் உள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், எப்படி இருந்த மனிஷா கொய்ராலா.. இப்படி மாறிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











