35 நாள் கூவத்தில் இருந்தேன்.. மோசமான வார்த்தையால் திட்டினாங்க.. நடிகை வேதனை!
சென்னை: வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மனிஷா யாதவ். அந்த படத்தை தொடர்ந்து, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒரு குபபை கதை திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு தமிழக அரசு சிறந்த நடிகைக்கான விருதை கொடுத்து கௌரவித்துள்ளது.
இதையடுத்து, யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கும் மனிஷா யாதவ், படம் வெளியாகி 8 வருடத்திற்கு பிறகு எனக்கு விருது கிடைத்து இருக்கிறது. இதற்கு முன்பே அந்த படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைக்கும் என நினைத்தேன் தாமதமாக கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான். இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்ன போதே நான் ஒகே சொல்லிவிட்டேன். எனக்கு கதை பிடித்து இருந்தது. நான் அந்த கதையை எப்படி பார்தேன் என்றால், கணவருக்கு தெரியாமல் தவறு செய்யும் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. அந்த தவறை உணர்ந்து திருந்தி வாழும் போது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சொல்லும் கதை. இது ஒரு கருத்து உள்ள படமாக இருக்கும் என்று தான் நினைத்தேன்.

நடிகை மனிஷா யாதவ்: ஆனால், கதையை கேட்ட பல நடிகைகள் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு காரணம், கணவருக்கு துரோகம் செய்யும் நெகட்டிவ் ரோல் என்பதால் யாரும் நடிக்க முன் வரவில்லை. அந்த படத்தின் படப்பிடிப்புக்காக கிட்டத்தட்ட 35 நாள் கூவத்தில் தான் இருந்தேன். அப்பாவி மனைவி, குழந்தையின் அம்மா என பூங்கொடி ரோலில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். தினேஷ் மாஸ்டர் மற்றும் இயக்குநர் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். படம் பார்த்துவிட்டு பலர் என்னை பாராட்டினாலும் ஒரு சிலர் என்னை மோசமான வார்த்தையால் திட்டினார்கள். ஆனால், அந்த படம் தான் எனக்கு இப்போது விருதை பெற்று கொடுத்து இருக்கு என நடிகை மனிஷா யாதவ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











