“படவாய்ப்பு தர படுக்கைக்கு அழைத்தனர்.. வெறுப்பில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன்”.. பிரபல நடிகை வேதனை
இயக்குனர்கள் சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை மஞ்சரி பட்நிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை: பட வாய்ப்பு வழங்க முன்னணி இயக்குனர்கள் சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை மஞ்சரி பட்நிஸ் தெரிவித்துள்ளார்.
பரோட் ஹவுஸ், ஜீனா இசிகா நாம் ஹேய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்திருப்பவர் நடிகை மஞ்சரி பட்நிஸ். தமிழில் மறைந்த இயக்குனர் ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர் இயக்கிய முத்திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் சக்தி எனும் படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை.

ஏன் நடிக்கவில்லை?
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மஞ்சரியிடம், சக்தி படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் ஏன் நடிக்கவில்லை என கேட்டனர். அப்போது அவர், "சக்தி படம் பெரிய ஹிட்டானது. அதன் பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

படுக்கைக்கு அழைத்தனர்
ஆனால் அந்த படங்களின் இயக்குனர்கள் தங்களுடைய படுக்கையை பகிர்ந்துகொண்டால் தான் வாய்ப்பு கிடைக்கும் என வற்புறுத்தினர். எனக்கு எனது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. எனவே அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டிய அவசியமில்லை. அதனால் தான் தெலுங்கு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.

மன அழுத்தம் ஏற்பட்டது
சக்தி படத்திற்கு பிறகான சம்பவங்கள் எனது மன நிலையை மிகவும் பாதித்தது. நான் சாதாரண பெண். எனக்கு சினிமா பின்னணி கிடையாது. எனவே கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன். சினிமா பின்னணி இல்லாமல் இந்த துறையில் ஜெயிப்பது மிகவும் கஷ்டமான காரியம்". என்றார் மஞ்சரி.

டோலிவுட்டில் சலசலப்பு
மஞ்சரி பட்நிசின் இந்த பகீர் குற்றச்சாட்டு டோலிவுட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டு யார் மீதும் மஞ்சரி குற்றஞ்சாட்டவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பது குறித்து தெலுங்கு மீடியாக்களும், ரசிகர்களும் புலனாய்வு செய்து வருகிறார்கள்.

காஸ்டிங் கவுச் புகார்கள்
பொதுவாக திரைத்துறையில் காஸ்டிக் கவுச் புகார்கள் நிறைய இருக்கின்றன. ஸ்ரீ ரெட்டி, சின்மயி, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











