ஒவ்வொரு சூரிய நிழலிலும் ஒரு கனவு இருக்கிறது.. மஞ்சிமா மோகனின் கருத்து !

சென்னை : மஞ்சிமா மோகன், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு கேப்ஷனை வெளியிட்டுள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன் மலையாளம் ,தமிழ் , கன்னடம் என்று பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக தேவராட்டம் என்ற படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். இவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகி கௌதம் மேனனால் தமிழுக்கு அறிமுகமாகிய நடிகை .

 actress manjima mohan instagram Photos

1997 முதல் 2002 வரையில் நிறைய மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் மஞ்சிமா மோகன். இதன்பின் நிவின் பவ்லியுடன் ஒரு வடக்கன் செல்ஃபி படத்தில் நாயகியாக அறிமுகமானார். நடித்த முதல் படமே பெரிய வெற்றி அடைய தெலுங்கு மற்றும் தமிழில் கௌதம் மேனனின் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா மற்றும் அதன் ரீமேக்கான சாஹசம் ஸ்வாஷாக சகிப்போ படத்திலும் நடித்தார்.

இந்த இரு படங்களின் வெற்றி காரணமாக தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்தார் மஞ்சிமா. முக்கியமாக தமிழில் ஷத்ரியன், இப்படை வெல்லும் மற்றும் தேவராட்டம் ஆகிய படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் வெற்றி படம் இல்லை என்றாலும் மஞ்சிமா நடிக்கும் படங்களில் தனது பங்கை சிறப்பான முறையில் செய்து நடித்து விட்டார் .

 actress manjima mohan instagram Photos

தற்போது மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜன்னல் ஓரம் நின்று வெயில் முகத்தில் படும் படி ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை பதிவேற்றி தனது சிந்தையில் தோன்றிய விசயத்தை எழுதியுள்ளார். அதில், ஒவ்வொரு சூரிய நிழலிலும் ஒரு கனவு இருக்கிறது என்று கூறியுள்ளார். கேப்ஷனை படித்த இளைஞர்கள் தங்களின் இதயங்களை கமெண்டுகளில் கொடுத்து வந்தாலும் பலர் இது என்ன கேப்ஷன் என்பது போல கேட்டு உள்ளனர் .

 actress manjima mohan instagram Photos

மஞ்சிமா தொடர்ந்து மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்களிலே நடித்து வருகிறார். தமிழில் அடுத்தாக விஷ்ணு விஷாலுடன் எப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜீவாவின் களத்தில் சந்திப்போம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அடுத்ததாக சிபிராஜின் வட்டம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X