கேரளா சேலையில் கொள்ளை கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சிமா மோகன்... வர்ணித்து வரும் ரசிகர்கள் !
கொச்சி : கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை மஞ்சிமா மோகன் தற்போது கேரளா சேலையில் வெளியிட்டுள்ள கொள்ளை கொள்ளும் புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஜாம் ஜாம் என்ற மலையாளத் திரைப்படத்தில் தற்பொழுது லீட் ரோலில் நடித்து வரும் மஞ்சிமா மோகன் தமிழில் துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே மிக பிரபலமான நடிகையாக வலம் வர ஆரம்பித்த நிலையில் தற்போது கேரளா சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

அச்சம் என்பது மடமையடா
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா மோகன். தற்பொழுது கதாநாயகியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதை தொடர்ந்து தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

முன்னணி கதாநாயகியாக
நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட மஞ்சிமா மோகன் அதைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்பொழுது பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பல முன்னணி கதாநாயகிகள் கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் மஞ்சிமா மோகன் இதுவரை கவர்ச்சி புகைப்படங்களையும் திரைப்படங்களில் எந்த ஒரு கவர்ச்சியும் காட்டாமல் முன்னணி கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆசையை நிறைவேற்றி
அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவரது அடுத்தடுத்த திரைப்படங்களை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் இப்படை வெல்லும், சத்ரியன், தேவராட்டம் என தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.

லீட் ரோலில்
ஜோதிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி கதாநாயகிகள் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் லீட் ரோலில் நடித்து வரும் நிலையில் மஞ்சிமா மோகன் மலையாளத்தில் ஜாம் ஜாம் என்ற திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருவது அனைவரையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துக்ளக் தர்பார்
இதற்கிடையில் தமிழிலும் துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் மற்றும் எப்ஐஆர் உள்ளிட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரளா சேலையுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கேரள பெண்களுக்கே
இதுவரை கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டாத மஞ்சிமா மோகன் திரைப்படங்களில் கவர்ச்சி இல்லாத கதாபாத்திரங்களிலும், சமூக வலைதளங்களில் கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் நிலையில் கேரள பெண்களுக்கே உரித்தான இந்த கேரளா சேலையில் மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள கொள்ளை கொள்ளும் புகைப்படம் ரசிகர்கள் பலரையும் ரசிக்க வைத்தும் வர்ணிக்க வைத்தும் வருகிறது.


Click it and Unblock the Notifications











