சம்பவம்.. நடக்க முடியாத நிலையில் சிம்பு பட நடிகை! போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: விபத்து ஒன்றில் சிக்கிய நடிகை மஞ்சிமா மோகன் நடக்க முடியாமல் வாக்கர் உதவியுடன் நடை பழகி வருகிறார்.
நடிகை மஞ்சிமா மோகன், சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையாடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சத்ரியன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மஞ்சிமா போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பதறி போய்விட்டனர்.
காலில் ஆபரேஷன்
அதாவது, வாக்கர் வைத்து நடப்பது போன்ற போட்டோவை பதிவிட்டிருக்கிறார் மஞ்சிமா மோகன். அதில் இரண்டு வாங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தால் காலில் ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

விரையிவில் குணமாகட்டும்
இதன் காரணமாக அடுத்த ஒரு மாதத்திற்கு பெட் ரெஸ்ட்தான் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகை மஞ்சிமா மோகனின் இந்த நிலையை பாரத்த நெட்டிசன்கள் விரைவில் குணமாகட்டம் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

சம்பவம்
மேலும் சிலர் அச்சம் என்பது மடைமையடா பைக் ஆக்ஸிடன்ட்டா என்று கேட்டு கிண்டலடித்து வருகின்றனர். மஞ்சிமா மோகன் சம்பவம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பிலா?
என்ன விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரிவிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பில் விபத்து நேர்ந்ததா அல்லது வாகனத்தில் சென்ற போது விபத்து நேர்ந்ததா என கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











