இந்தா வந்துட்டேன்.. மல்லுவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மஞ்சிமா மோகன்!

சென்னை: நடிகை மஞ்சிமா மோகன் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்த மஞ்சிமா மோகன், பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

Actress manjima mohan onam special photoshoot

நடிகை மஞ்சிமா மோகன்: இவரின் முதல் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும், அதில் இடம் பெற்றிருந்த அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. இதனால், முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார் மஞ்சிமா மோகன். இதையடுத்து, இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.

காதல் திருமணம்: இவர், வளர்ந்து வரும் நடிகரான கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்தியுடன் இணைத்து தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் பின்னர் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

Actress manjima mohan onam special photoshoot

கடும் விமர்சனம்: திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகவே இருக்கிறார்.சினிமாவிற்கு வந்த புதிதில் ஒல்லியாக அழகிய உடல் அமைப்புடன் இருந்தார், பின்னர் போக போக குண்டாக தொடங்கினானார். இதனால் இவரை பலரும் ட்ரோல் செய்து கிண்டல் செய்தனர். அனால் இவர் துணிச்சலாக விமர்சங்களுக்கும், ட்ரோல்களுக்கும், தன்னுடைய எடை எந்தவிதத்திலும் ஒரு குறையாக தான் பார்க்கவில்லை என்று தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

Actress manjima mohan onam special photoshoot

ஓணம் ஸ்பெஷல்: தற்போது உடல் எடையை குறைத்து இருக்கும் மஞ்சிமா மோகன், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஓணம் சேலையில் அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X