வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக நடிக்கும் மஞ்சுவாரியர்.. கேரக்டர் பேரு என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களை கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே துவங்கியுள்ளது படக்குழு.

அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் மனசிலாயோ கடந்த 9ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்று வருகிறது. தொடர்ந்து youtube-யில் ட்ரெண்டிங்கில் உள்ள இந்த பாடலில் ரஜினிகாந்துடன் இணைந்து உற்சாகமாக ஆட்டம் போட்டுள்ளார் மஞ்சு வாரியார். இவர்களின் கெமிஸ்ட்ரி இந்த பாடலில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

rajinikanth manju warrier vettaiyan movie

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாபச்சன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தை டிஜே ஞானவேல் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் வேலைகள் உள்ளிட்டவற்றை ரஜினிகாந்த் உள்ளிட்ட படத்தின் நடிகர் நடிகைகள் முடித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மாஸ் காட்டும் ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிளே அதரி புதிரியாக மிகப்பெரிய ஹிட்டை அடித்துள்ளது. இந்த பாடல் கடந்த நான்கு தினங்களில் 11 மில்லியன் வியூஸ்களை பெற்று மாஸ் காட்டி வருகிறது. தொடர்ந்து youtube-ல் ட்ரெண்டிங்கிலும் இந்த பாடல் உள்ளது. இந்த பாடலில் ரஜினியுடன் இணைந்து சூப்பர் மாஸாக ஆட்டம் போட்டுள்ளார் மஞ்சு வாரியர். இந்நிலையில் இந்த படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ள மஞ்சு வாரியர், இது போன்ற பாடலில் இத்தனை துணை நடிகர்களுக்கு மத்தியில் ஆடுவது இதுவே முதல் முறை என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ரஜினி மனைவியாக நடிக்கும் மஞ்சு வாரியர்: மேலும் இந்த படத்தில் தான் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளதாகவும் தன்னுடைய கேரக்டர் பெயர் தாரா என்றும் மஞ்சு வாரியர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் Vloggerஆக தான் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேட்டையன் படத்தில் தனக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தன்னிடம் இந்த கேரக்டர் குறித்து ஞானவேல் பேசியபோது, தனக்கு ரஜினியுடன் இணைவதும் இரட்டை சந்தோஷத்தை கொடுத்ததாகவும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார். படத்தில் ரஜினி சார் கேரக்டருக்கும் தான் முக்கியமானவராக இருப்பதாகவும் மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்: முன்னதாக அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த மஞ்சு வாரியர், தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விடுதலை 2 படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே சூப்பர் ஸ்டாருக்கே அவர் ஜோடியாக நடித்துள்ளது மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் உற்சாகத்துடன் பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் மிகப்பெரிய முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் மஞ்சு வாரியர், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X