For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெறிபிடித்த வேட்டை நாய் உடன் மலை உச்சியில் நின்று கெத்தாக போஸ் கொடுக்கும் அசுரன் நடிகை!

    |

    கொச்சி : மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர்.

    தமிழ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வர அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

    மலையாளத்தில் கைநிறைய படங்களில் நடித்து வரும் மஞ்சு வாரியர் கையில் வெறிபிடித்த வேட்டை நாய் உடன் மலை உச்சியில் நின்றுகொண்டு செம கெத்தாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஹவ் வோல்ட் ஆர் யூ

    ஹவ் வோல்ட் ஆர் யூ

    நடிகை மஞ்சு வாரியர் மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார். இவரது சிறந்த நடிப்பை பாராட்டி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹவ் வோல்ட் ஆர் யூ என்ற திரைப்படம் இவரை இந்திய அளவில் அனைவரையும் கவனிக்க வைத்தது. இந்த படம் தமிழில் ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

    தனுஷுக்கு ஜோடியாக

    தனுஷுக்கு ஜோடியாக

    தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்த மஞ்சு வாரியர் தமிழில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் நீண்ட நாள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து ஆரம்பமே அமர்க்களப்படுத்தி இருந்தார்.

    ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

    ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

    அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு எந்த அளவிற்கு பாராட்டப்பட்டதே அளவுக்கு மஞ்சு வாரியரின் நடிப்பும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இப்போதைக்கு தமிழில் எந்த படமும் இல்லை என்றாலும் மலையாளத்தில் கை நிறைய படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

    வொண்டர் வுமன் காஸ்ட்யூமில்

    வொண்டர் வுமன் காஸ்ட்யூமில்

    மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மஞ்சு ஆரியர் பார்க்கவே பயங்கரமான வெறிபிடித்த வேட்டை நாயை அசால்டாக அடக்கி கையில் பிடித்துக்கொண்டு மலை உச்சியில் வித்தியாசமான வொண்டர் வுமன் காஸ்ட்யூமில் கெத்தாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் செம வைரலாகி வருகிறது.

    கொச்சியில் பைக்கில் சுற்றிய மஞ்சு வாரியர்...இணையத்தை கலக்கும் ஃபோட்டோக்கள்கொச்சியில் பைக்கில் சுற்றிய மஞ்சு வாரியர்...இணையத்தை கலக்கும் ஃபோட்டோக்கள்

    English summary
    Asuran fame Actress Manju Warrier looks elegant in her latest photo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X