ரஜினிகாந்த், அஜித் இவங்ககிட்ட எல்லாம் கத்துக்க வேண்டிய விஷயம்.. மஞ்சு வாரியர் சொன்ன ரகசியம்!
சென்னை: நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளவர். இடையில் தன்னுடைய திருமணம், குழந்தை என்று அடுத்தடுத்து கவனம் செலுத்திய இவர், படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
தமிழிலும் தனுஷ், ரஜினிகாந்த், அஜித், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் அவரது மனைவியாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர். இவர்கள் கூட்டணியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன் பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்களின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்க்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களை தயாரிப்பு தரப்பு முடுக்கிவிட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மாஸாக ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர்: இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தாரா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் மஞ்சு வாரியர். முன்னதாக தனுஷின் அசுரன், அஜித்தின் துணிவு, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மஞ்சு வாரியர், அடுத்ததாக வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்நிலையில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளது தனக்கு டபுள் தமாக்காவாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் இந்த படத்தில் நடிக்க தன்னை டிஜே ஞானவேல் அணுகியதாக மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
மஞ்சு வாரியருக்கு கிடைத்த டபுள் தமாக்கா: அப்போது ஜெய் பீம் என்ற சிறப்பான படத்தை கொடுத்த இயக்குனருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தான் மிகப்பெரிய சந்தோஷத்துடன் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் சில தினங்களில் இந்த படத்தின் ஹீரோ ரஜினி என்று தெரிந்தவுடன் தனக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்ததாகவும் மஞ்சு வாரியர் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் மனசிலாயோ பாடல் இந்த அளவிற்கு தனக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று தரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மலையாளத்திலும் இதுபோன்ற பாடலில் தான் முன்னதாக நடித்ததில்லை என்றும் தன்னுடன் 4000 துணை நடிகர்கள் இணைந்து இந்த பாடலில் நடித்தது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்ததாகவும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
ரஜினி, அஜித்திடம் கற்க வேண்டிய விஷயம்: இந்நிலையில் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பான விஷயம் உள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்த போதிலும் அவர்களது எளிமை மற்றும் சக நடிகர்களுடன் அவர்கள் பழகும் தன்மை போன்றவை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார். தான் எளிமையான பெண் என்று முன்னதாக நினைத்திருந்த நிலையில், இவர்களுடன் பழகிய பின்புதான் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் அதிகமாக உள்ளதாக தனக்கு புலப்பட்டதாகவும் மஞ்சுவாரியர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











