இந்தப் படத்திற்கு இதுபோதும்.. வேட்டையன் பட சூட்டிங்கில் மஞ்சு வாரியரிடம் கூறிய டிஜே ஞானவேல்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையின் படம் அவரது 170வது படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை முன்னதாக ஜெய் பீம் என்ற மிக மாஸான படத்தை கொடுத்த டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
வேட்டையன் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் லைகா நிறுவனமும் மற்றும் படத்தின் நடிகர், நடிகைகளும் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் படத்தின் நடிகர்கள் படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு புறம் லைகா நிறுவனமும் படத்தின் கேரக்டர்களின் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கி வருகிறது.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக காத்திருக்கிறது. இந்த படத்தின் ரிலீசையொட்டி படக்குழுவினர் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை விமான நிலையத்துக்கு வரும் போதும் தன்னுடைய பங்கிற்கு படம் குறித்த எதிர்பார்ப்பை அடுத்தடுத்து தூண்டி வருகிறார். அந்த வகையில் இன்றைய தினமும் அவர் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஒவ்வொரு நடிகரும் தன் பங்கிற்கு படம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் டிஜே ஞானவேல்: வேட்டையன் பட இயக்குனர் டிஜே ஞானவேலும் படம் ரஜினிகாந்தின் இமேஜிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக தானோ அல்லது ரஜினிகாந்தோ எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளவில்லை என்றும் இருவரும் இணைந்து சிறப்பான படத்தை கொடுக்க முயன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக தாரா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். இந்தப் படம் தனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்ததாக முன்னதாக பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.
மஞ்சு வாரியர் உற்சாகம்: டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிப்பது தனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்த நிலையில், தொடர்ந்து தன்னிடம் பேசிய ஞானவேல் படத்தின் ஹீரோ ரஜினிகாந்த என்று கூறியவுடன் தான் உற்சாகத்தில் துள்ளி குதித்ததாகவும் மஞ்சு வாரியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது அடுத்த பேட்டியில் இந்த படத்திற்காக தான் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய பெஸ்ட்டை கொடுக்க முயன்றதாகவும் அடுத்தடுத்து மிக அதிகமான மெனக்கெடலுடன் ஒவ்வொரு காட்சியையும் நடிக்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இது கமர்சியல் படம் என்றும் இந்த படத்திற்கு அவரது இந்த நடிப்பே போதும் என்றும் மஞ்சு வாரியாரின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் தான் வேறொரு படத்தை கொடுப்பதாக டிஜே ஞானவேல் தன்னிடம் கூறியதாக மஞ்சு வாரியர் மேலும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் பாராட்டு: மேலும் தன்னுடைய முதல் சந்திப்பில் தன்னிடம் பேசிய ரஜினிகாந்த், அவர் அசுரன் படத்தை பார்த்ததாகவும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாகவும் கூறியதை பகிர்ந்துள்ள மஞ்சு வாரியர், மேலும் தான் பைக் ஓட்டுவேனா என்றும் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் ரஜினிகாந்த் அப்டேட்டாக உள்ளதையும் குறிப்பிட்டு மஞ்சு வாரியர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சனின் காம்பினேஷன் காட்சிகளின்போது தான் அப்படியும் இப்படியும் அவர்களது நடிப்பை பார்த்து பிரமித்ததாகவும் மஞ்சு வாரியர் தன்னுடைய உற்சாகத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











