மஞ்சு வாரியரின் கனவு நனவான தருணம்... அவங்களே சொல்லியிருக்காங்க
சென்னை : மலையாள திரையுலகில் மட்டுமின்றி தமிழிலும் அசுரன் படம்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர்நடிகை மஞ்சு வாரியர்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மரைக்காயர் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் அரபி மொழியில் உருவாகிவரும் ஆயிஷா படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை மஞ்சு வாரியர்
நடிகை மஞ்சு வாரியர் தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் தனுஷுடன் நடித்து வெளியான அசுரன் மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வெளியான மரைக்காயர் படங்கள் இவருக்கு சிறப்பான கவனத்தை பெற்றுத் தந்துள்ளன.

ஆயிஷா படம்
இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் அரபி மொழிகளில் உருவாகிவரும் ஆயிஷா என்ற படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து வருகிறார். இதையொட்டி யூஏஇயில் நடைபெற்றுவரும் சூட்டிங்கில் அவர் பங்கேற்று நடித்து வருகிறார்.

மஞ்சு வாரியருடன் இணைந்த நடனப்புயல்
இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற எம் ஜெயச்சந்திரன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றிற்கு பிரபுதேவா நடனம் அமைத்து வருகிறார். மஞ்சு வாரியருக்காக அவர் இந்த நடனத்தை வடிவமைத்து வருகிறார்.

மஞ்சு வாரியர் மகிழ்ச்சி
இதுகுறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய நீண்ட நாள் கனவு இதன்மூலம் நனவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சில படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பன்மொழி படம்
அறிமுக இயக்குநர் ஆமிர் பல்லிக்கல் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. மலையாளம், ஆங்கிலம் மற்றும் அரபியில் இந்தப் படம் உருவாகி வரும் நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
Recommended Video

முதல்கட்ட படப்பிடிப்பு
கடந்த 26ம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லியில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் முதல் பலமொழி படம் இது என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











