ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக நான் தான் நடிக்கவிருந்தேன்.. ரகசியம் பகிர்ந்த மஞ்சு வாரியர்!
சென்னை : நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர்.
தமிழில் நடிகர் தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்ற மஞ்சு வாரியர், சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்திலும் நடித்துள்ளார்.
துணிவு படத்தில் சில ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்துள்ள மஞ்சு வாரியர், ஸ்கை ஜெட் ஓட்டும் காட்சிகளிலும் அஜித்திற்கு இணையாக நடித்துள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர்
நடிகை மஞ்சு வாரியர் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர். பல சிறப்பான படங்களில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருபவர். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையால் சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அடுத்தடுத்த படங்கள்
தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து தன்னுடைய இயல்பான கேரக்டரை வெளிப்படுத்தினார். இந்தப் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இதன்மூலம் இவருக்கு தமிழிலும் அதிகமான ரசிகர்கள் உருவாகினர். தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான துணிவு படத்திலும் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

அதிரடி கேரக்டரில் மஞ்சு வாரியர்
இந்தப் படத்தில் மஞ்சு வாரியரின் அதிரடி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. க்ளைமாக்ஸ் காட்சிகளில், ஸ்கை ஜெட் ஓட்டும் காட்சிகளிலும் நடித்து அஜித்திற்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மஞ்சு வாரியர். தொடர்ந்து மலையாளத்திலும் தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் மஞ்சு வாரியரை காண முடிகிறது.

சீக்ரெட்டை வெளிப்படுத்திய நடிகை
நீண்ட ஆண்டுகளாக மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் மஞ்சு வாரியர். இதனிடையே தற்போது தமிழில் தான் நடிக்கவிருந்து நடிக்க முடியாமல் போன படம் குறித்த சீக்ரெட்டை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2000ம் ஆண்டில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருந்த கேரக்டரில் தான் நடிக்கவிருந்ததாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

தவறிப் போன சான்ஸ்
படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன், அந்த கேரக்டருக்காக முதலில் தன்னைதான் அணுகியதாகவும், அப்போது மலையாளத்தில் சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால், அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாமல் போனதாகவும் மஞ்சு வாரியர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம்
அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் சிறப்பான வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் ப்ரெஷ் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் 23 ஆண்டுகள் கழித்து அந்தப் படம் குறித்த நினைவுகளை மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











