என்னது இந்த விஷயமும் செஞ்சிருக்காங்களா... இன்னும் எவ்ளோ டேலண்ட் வச்சுருக்காங்க மஞ்சு வாரியர்?

சென்னை : மலையாளத்தில் மட்டுமில்லாமல் தொடர்ந்து தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை மஞ்சு வாரியர். தமிழில் நடிகர் தனுஷுடன் நடித்த இவர் தற்போது அஜித்துடன் கமிட்டாகியுள்ளார். இதுமட்டுமில்லாமல் இயக்குநர் சந்தோஷ் சிவனின் சென்டிமீட்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர் மலையாளம் மற்றும் தமிழில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

சந்தோஷ் சிவன் இயக்கம்

சந்தோஷ் சிவன் இயக்கம்

மலையாளத்திலும் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஜேக் அண்ட் ஜில் என்ற படத்தில் இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், பசில் ஆன்டணி, ஷோபின் ஷகீர் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழில் இந்தப் படம் சென்டிமீட்டர் என்ற பெயரில் வரும் 20ம் தேதி ரிலீசாக உள்ளது.

சந்தோஷ் சிவனின் 3வது மலையாளப்படம்

சந்தோஷ் சிவனின் 3வது மலையாளப்படம்

இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள 3வது மலையாள படம் இது. மற்ற மொழிகளிலும் சேர்த்து அவர் இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார் யோகி பாபு. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

பாடல் பாடிய மஞ்சு வாரியர்

பாடல் பாடிய மஞ்சு வாரியர்

இந்நிலையில் படத்தின் இன்னொரு சிறப்பாக தற்போது தமிழில் மஞ்சு வாரியர் இந்தப் படத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். கிம் கிம் கிம் என்று துவங்கும் இந்தப் பாடலை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நடிப்பில் மிரட்டும் மஞ்சு வாரியர் தற்போது பாடலும் பாடத் துவங்கியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Recommended Video

'Trisha மாதிரி நடிச்சிருக்க முடியாது' - Manju Warrier Throw back Interview | Filmibeat Tamil
அஜித்துடன் ஜோடி சேர்ந்த மஞ்சு வாரியர்

அஜித்துடன் ஜோடி சேர்ந்த மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர் தன்னுடைய விவாகரத்திற்கு பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக அஜித் 61 படத்திலும் ஹெச் வினோத் இயக்கத்தில் இணைந்துள்ளார். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், மஞ்சு வாரியரின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்க்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X