விஜய் ‘CM‘ ஆகணும்.. தவெக கொடியுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற நடிகை!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, புதிய அரசியல் அமைப்புகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (தவெக) இந்த தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொடியுடன் கிரிவலம்: தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் அனல் பறந்து கொண்டிருக்கிறது. கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு விதங்களில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை மனோ சித்ரா, திருவண்ணாமலை கிரிவலம் சென்று, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை கையில் ஏந்தி, கிரிவலப் பாதையில் சுற்றிவந்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே இந்த கிரிவலத்தை மேற்கொண்டு வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பக்தி உணர்வும், அரசியல் ஆதரவும் இணைந்த இந்த செயல், பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay TVK Mano Chitra
Photo Credit:

தேர்தல் திருவிழா: நடிகர் ராமராஜன், நடிகர் பொன்னம்பலம், விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்ஜீவ், தீபக், பிக்பாஸ் தாமரைச்செல்வி உள்ளிட்டோர் தவெக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய கட்சி என்றாலும், மக்கள் மத்தியில் வேகமாக ஆதரவைப் பெற்றுக் கொண்டு வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் இந்த தேர்தல் பயணம் எப்படி அமையும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, ரசிகர் வட்டார ஆதரவு வாக்குகளாக மாறுமா என்பது இந்த தேர்தலின் முக்கிய கேள்வியாக பார்க்கப்படுகிறது.

நடிகை மனோ சித்ரா: தவெக கொடியுடன் கிரிவலம் வந்த நடிகை மனோ சித்ரா, அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து நீர்பறவை, வீரம், நேற்று இன்று, அந்தமான்,புதிய முகம், ரூம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் வெற்றி பெற அவர் கிரிவலம் வந்தது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

`

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X