35 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகை மனோரமா
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை மனோரமா 35 நாட்கள் கழித்து இன்று வீடு திரும்பினார்.
ஆச்சி என்று திரையுலகினரால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை மனோரமாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழங்காலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

காளஹஸ்தி
காலில் அறுவை சிகிச்சை செய்த பிறகு மனோரமா காளஹஸ்தி கோவிலுக்கு சென்ற இடத்தில் தங்கி இருந்த அறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மார்ச்
கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக மனோரமா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

மீண்டும்
கடந்த மே மாதம் 28ம் தேதி அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்படவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரக கோளாறு
மனோரமாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

வீடு திரும்பினார்
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மனோரமாவின் உடல் நிலை தேறியுள்ளது. இதையடுத்து 35 நாட்கள் கழித்து அவர் இன்று வீடு திரும்பினார்.


Click it and Unblock the Notifications











