Don't Miss!
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை மந்திராவிற்கு பெண்குழந்தை! நடிப்புக்கு லீவ்!!
சென்னை: நடிகை மந்த்ராவிற்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.
தமிழில் ‘பிரியம்', ‘லவ் டுடே', ‘கங்கா கௌரி', ‘ரெட்டை ஜடை வயசு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மந்த்ரா. இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக தமிழில் ‘ஒன்பதுல குரு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘வாலு' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் ராசி என்ற பெயரில் நடித்து வரும் மந்த்ரா, ஸ்ரீனிவாஸ் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றினை தொகுத்து வழங்கினார் மந்த்ரா. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மந்த்ராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து மந்த்ரா கூறும்போது, எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என் கணவரும் அதைத்தான் விரும்பினார். குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இனி ஒரு வருடத்துக்கு பிறகே நடிப்பேன் என்றார்.