நான் தனுஷோட கிளாஸ்மேட்.. அருந்ததி நான் பண்ணியிருக்க வேண்டிய படம்.. மனம் விட்டுப் பேசிய மந்த்ரா!
சென்னை: 6 மாத குழந்தையாக இருக்கும் போதே கேமரா முன்பாக நடிக்க வந்து விட்டேன் என சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை மந்த்ரா தன்னை பற்றிய பல தெரியாத விஷயங்களை அடுக்கி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
1996ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மந்த்ரா. அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு, ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் விஜய்யுடன் லவ் டுடே படத்திலும் நடித்துள்ளார்.

பெரிய இடத்து மாப்பிள்ளை, தேடினேன் வந்தது, கங்கா கெளரி, கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம் என பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து குத்தாட்டம் போட்ட மந்த்ரா தெலுங்கில் ராசி எனும் பெயரில் ஹோம்லி லுக்கில் பல சிறந்த படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி நடிகை மந்த்ரா: பிரியம் படத்திலேயே மந்த்ராவை கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் மாற்றி விட்டனர். ரெட்டை ஜடை வயசு படத்திலும் அவருக்கு அப்படியொரு ரோல் தான். அஜித், ஜோதிகா நடித்த ராஜா படத்தில் இடம்பெற்ற "வத்தலகுண்டு" பாடலிலும் கவர்ச்சி பொங்க நடனமாடியிருப்பார். ஆனால், தனக்கு சேலை அணியதான் பிடிக்கும் என்றும் தெலுங்கில் ரெயின் டான்ஸ் ஆடியதில்லை என்றும் கிளாமராக உடை அணிந்து நடித்தது கிடையாது என்றும் அங்கே கம்ஃபர்டபிளாக இருந்ததால் தான் பல படங்களில் நடித்துள்ளேன் என்றும் செம ஓபனாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை மந்த்ரா.

தனுஷ் என் கிளாஸ்மேட்: நடிகை மந்த்ராவின் நிஜப் பெயர் விஜய லட்சுமி. தமிழில் இயக்குநர் பாண்டியன் பிரியம் படத்தில் அவரை மந்த்ரா எனும் பெயரில் அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் மந்த்ரா என்றால் சர்ச்சைக்குரிய பெயர் என்பதால் அங்கே ராசி என்கிற பெயரில் படங்களில் நடித்து வந்தார். சமீப காலமாக ஓடிடியில் தமிழ் படங்களை பார்க்கிறேன் என சொன்ன மந்த்ரா நடிகர் தனுஷ் நடித்த ராயன் படத்தை பார்த்தேன் ரொம்பவே பிடித்தது என்றார். மேலும், தனுஷ் என் கிளாஸ்மேட் என்கிற ஆச்சர்யத் தகவலையும் கூறியுள்ளார். தனுஷ் எப்போதுமே தேர்வு செய்து படங்களை செய்வார். அவர் நடிக்கும் அனைத்து படங்களையும் பார்த்து விடுவேன். ரொம்பவே பிடிக்கும் என்கிறார் மந்த்ரா. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தையும் ஓடிடியில் பார்த்து ரசித்தேன் என்றார்.

அருந்ததி படத்தில்: 22 வயதிலேயே திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன நிலையில், அருந்ததி படத்தின் தயாரிப்பாளர் தன்னை பார்த்து அவசரப்பட்டுட்டீயேம்மா, இல்லையென்றால் உன்னைத் தான் அருந்ததி படத்தில் அனுஷ்காவுக்கு பதில் நடிக்க வைத்திருப்பேன் என்றார் என்றும் மந்த்ரா வெளிப்படையாக பேசியுள்ளார். அருந்ததி படத்தின் ப்ரீமியர் காட்சியை பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டேன். இப்படியொரு நல்ல படத்தை மிஸ் செய்து விட்டோமே என்றும் அனுஷ்கா அந்த படத்தை சிறப்பாக செய்திருந்தார் என்றும் மந்த்ரா பாராட்டியுள்ளார். சினிமாவில் தேவயாணி, ரம்பா, சிம்ரன் உள்ளிட்ட நடிகைகளுடன் நல்ல நட்பு இருக்கிறது. ஆனால், யாரிடமும் அதிகமாக பேச்சு வைத்துக் கொள்வதில்லை என்றும் கூறியுள்ளார். மீண்டும் நடிக்க வந்திருக்கும் மந்த்ரா விரைவில் உசுரே எனும் படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











