மொத்தமாக மாறிய மந்த்ரா.. 9 ஆண்டுகளுக்கு பின் ரீ என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா?
சென்னை: பிரியம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மந்த்ரா ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். ஆறாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர், பல நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமாவை விட்டு விலகி இருந்த மந்த்ரா, சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
நடிகை மந்த்ரா அருண் விஜய்க்கு ஜோடியாக 'பிரியம்' படத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கில் ராசி என்ற பெயரில் நடித்து வந்த இவர், பிரியம் படத்திற்காக தனது பெயரை மந்த்ரா என மாற்றிக்கொண்டார். இவர் நடித்த முதல் படமே தொடர்ந்து, மந்த்ராவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய்யுடன் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கலாட்டா கல்யாணம், கொண்டாட்டம், புது குடுத்தனம், கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம் என பல படத்தில் நடித்து வந்தார்.
ராசியான நடிகை: நடிகை மந்த்ரா தமிழை விட தெலுங்கில் தான் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு இவரை ராசி என்று சொன்னால் தான் தெரியும், ராசியான நடிகை என்பதால், நடிகை மந்த்ரா அந்த பெயரை வைத்துக்கொண்டார். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து 2005ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீமுனியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார் மந்த்ரா. அவருக்கு பத்து வருடங்கள் கழித்துத்தான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை மந்த்ரா, குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ரீ எண்ட்ரி: இதற்கிடையில் மவுலி ராதாகிருஷ்ணன் தயாரித்து, நவீன் டி.கோபால் இயக்கி அருணாசலம், ஜனனி நடித்துள்ள 'உசுரே' படத்தில் நடிகை மந்த்ரா முக்கிய ரோலில் நடித்துள்ளார். 2016ம் ஆண்டு கவலை வேண்டாம் என்கிற படத்தல் மந்த்ரா நடித்து இருந்தார். தற்போது 9 ஆண்டுகள் பிறகு கழித்து தமிழில் மீண்டும் மந்த்ரா நடித்துள்ளார். நடிப்பது குறித்து பேசிய மந்த்ரா, தமிழ் சினிமாவை விட்டு நான் எங்கும் போய்விடவில்லை. இடையில் கொஞ்சம் கேப் விழுந்துவிட்டது. நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். அந்த வகையில் 'உசுரே' படத்தில் நடித்துள்ளேன். நிறைய பேர் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நானும் அப்படி ஒரு அம்மா ரோலில் நடித்துவிட்டு போக விரும்பவில்லை. ஒருநாள் படப்பிடிப்பாக இருந்தாலும்,அந்த கதாபாத்திரம் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும் அப்படித்தான் இந்த படம் எனக்கு கிடைத்துள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











